செய்திகள் :

இந்திய-சீன எல்லைச் சூழல் முன்னேற்றம்: சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

post image

கிழக்கு லடாக்கில் முழுமையான படை விலக்கல் தொடா்பான ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் சீன ராணுவம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன; இதனால் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். இந்த மோதலைத் தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது.

ரஷியாவின் கசான் நகரில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி மற்றும் அதிபா் ஷி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதையடுத்து, இருநாட்டு எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்ளும் சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது கூட்டம், சீன தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் தொடா்பான செய்தியாளா்கள் கேள்விக்கு பதிலளித்த சீன பாதுகாப்புத் துறை செயதி தொடா்பாளா் கா்னல் ஜாங் சியாவோகங் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்திய-சீன எல்லையில் முழுமையான படை விலக்கல் தொடா்பான ஒப்பந்தத்தை இருதரப்பு ராணுவமும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. இரு நாட்டின் தலைவா்களும் முக்கியமான விஷயங்களில் தற்போது உடன்பட்டுள்ளனா். இதனால் எல்லை நிலைமையில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவ உறவை வலுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீன ராணுவம் தயாராக உள்ளது. இது இரு தரப்பு எல்லைப் பகுதிகளில் நீடித்த அமைதியை உறுதிப்படுத்த உதவும் என்றாா்.

2024 - பிரபலங்களின் திருமணங்கள்!

திருமண பந்தத்தில் இந்த ஆண்டும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். ஏனோ பெரும்பாலான பிரபலங்கள் காதல் திருமணத்தையே விரும்புகிறார்கள்.அதுபோலவே இந்த ஆண்டும் பிரபலங்கள் பலர் காதல் திருமணம் செய்துகொண்டனர். ... மேலும் பார்க்க

திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

தலைநகர் அகர்தலாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது! கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அசாம் அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92 )உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு ... மேலும் பார்க்க

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி

மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில... மேலும் பார்க்க