மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.
தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(டிச. 28) முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
இதையும் படிக்க | அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?
அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லி சென்று மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக எம்.பி. டி.ஆர். பாலு அப்போது உடனிருந்தார்.
தொடர்ந்து, மன்மோகன் சிங் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, மன்மோகன் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.