செய்திகள் :

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

post image

ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘காதலிக்க நேரமில்லை’, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘நவீன காலத்துக்கு ஏற்ற கதைக்களம்(காதல் பிண்ணனியில்?)’.

கணவனே இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையா? இந்த இரண்டுமே வேண்டாம்! குழந்தை மட்டும் போதும் என்ற முடிவை பெண்ணொருத்தி எடுத்துவிட்டால் என்ன நடக்கும்? இதுதான் காதலிக்க நேரமில்லை கதை.

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் தரத்தில் இனிமையாக வந்திருப்பது படத்துக்கு பலம். ஜெவியின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் கண்களைக் கவருகின்றன.

படத்தின் கதாநாயகனாக ரவி மோகன்(ஜெயம் ரவி) இருந்தாலும், கதையின் நாயகி நித்யா மேனன் படத்தின் முதுகெலும்பாக வருகிறார்.

மலையாள நடிகர் லால், ரவியின் அப்பா கதாபாத்திரத்தில் தனக்கே உரிய யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல, கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாடகர் மனோ தன் பங்கை சிறப்பாக பண்ணியிருக்கிறார். விநோதினி வைத்தியநாதன் நடிப்பும் ஏற்றிருக்கும் கதாபாத்திரமும் சிறப்பு.

கதாநாயகனும் கதாநாயகியும் கட்டடக்கலை படிப்பை முடித்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், நாயகனை காதலித்து வருகிறார் ஜான் கொக்கேன். ரவியின் கதாபாத்திரமோ, ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் வாழ வேண்டுமென்பதை அதிகம் விரும்பும் குணாதிசயம் கொண்டவராக எழுதப்பட்டிருக்கிறது.

‘ஜில்லுனு ஒரு காதல்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ஓகே கண்மணி’, ‘என்றென்றும் புன்னகை’ இந்த வரிசையில், ஏற்கெனவே காதல் திரைக்கதைகள் பலவற்றை பார்த்துவிட்ட சினிமா ரசிகர்களுக்கு, மேற்கண்ட படங்களின் சாயல் இந்த படத்திலும் தென்படுவதை தவிர்க்க முடியாது.

இன்னொருபுறம், நிச்சயதார்த்தம் வரை செல்லும் திருமணச் சடங்குகள் திடீரென முறிவதால் செயற்கை கருத்தரித்தல் மூலம் கர்ப்பமடைகிறார் நித்யா மேனன்.

காதலில் முறிவைச் சந்தித்த கதாநாயகனும் கதாநாயகியும் விதிவசத்தால் ஏதோவொரு தருணத்தில் சந்திக்க நேரிடுகிறது. அப்போதிருந்து இருவருக்குமிடையே ஈர்ப்பு ஏற்படுகிறது. இரு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட இருவர் வாழ்க்கையில் இணைவார்களா? செயற்கை கருத்தரித்தல் குழந்தை பெற்றெடுக்கும் நித்யா மேனன், தனியொரு பெற்றோராக அந்த குழந்தையை அவர் வளர்த்தெடுப்பதை இந்த சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்? இது சாத்தியமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிளைமாக்ஸில் தெரிய வருகிறது.

அதனைத்தொடர்ந்து கதை அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறது. ரவியின் நண்பராக வரும் வினய் நெடுநாள் கழித்து திரையில் தோன்றினாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அதற்கு, அவரது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதுதான்.

ஓரினச் சேர்க்கையாளராக தான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளதற்கு வினய்க்கு பாராட்டுகள். அப்படியானால், இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க முடியுமா? என்றால் நிச்சயம் பார்க்கலாம்.

வெளிப்படைத்தன்மையுடன் படத்தில் என்ன காட்ட வேண்டுமோ அதை நேர்த்தியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி சீர்திருத்தம் ஏற்படுத்த முயற்சித்திருக்கும் கிருத்திகாவுக்கு வாழ்த்துகள்.

ரவியின் இன்னொரு நண்பராக வரும் யோகி பாபு கலகலப்பை முடிந்தளவுக்கு வரச் செய்திருக்கிறார்.

இன்றைய கால இளைஞர்களுக்கு ஏற்றவாறு கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு பலம்தான்.

அதற்காக ஏ செண்டர் ரசிகர்கள்தான் இந்த படத்தை விரும்புவார்களா? என்றால் இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த மாதிரி படம் எடுக்கப்பட்டுள்ளது.

என்ன, இன்னும் அழுத்தமாக திரைக்கதையை பதிவு செய்திருக்கலாமே என்ற எண்ணமும் ஆங்காங்கே பார்வையாளர்களுக்கு வருகிறது.

ஒரு கட்டத்தில் கதாநாயகியின் மகனுக்கும் கதாயகனுக்கும் ஏற்படுகிற பிணைப்பு. பிளே பாய் ஆக வலம் வரும் கதாநாயகனிடம் ஒரு குழந்தை ஏற்படுத்துகிற மாற்றங்கள்.. இவையெல்லாம் திரையில் அதிகம் பார்த்திடாத கட்சிகள்.

இதையும் படிக்க :காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?

ஜெயிலர்-2 முதல் டீசர்..! ஆக்‌ஷனில் மிரட்டும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்-2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(ஜன. 14) மாலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வழித்துணையே! டிராகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிவரும் டிராகன் திரைப்படத்தின் புதிய பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான இந்த பாடலின் ”ஆஸ்கர் புரோமோ” விடியோ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வழித்துணைய... மேலும் பார்க்க

ஆதரவு, ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி: அஜித்!

ஆதரவு, ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.துபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்று 3-ஆவது இடம்பிடித்து சாதித்துக் காட்டியுள்ள அஜித் குமாரின் அணியையும் அவரை... மேலும் பார்க்க

“அஜித் வாழ்க, விஜய் வாழ்க...” இது வேண்டாமே! -அஜித் அறிவுரை

சினிமா ரசிகர்கள் படம் பார்ப்பது சரிதான். ஆனால், அதற்காக “அஜித் வாழ்க, விஜய் வாழ்க...'' என்று சண்டை போடுவது சரியானதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார் நடிகர் அஜித் குமார்.துபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில... மேலும் பார்க்க

நடிகர் சூரியின் புதிய படம்: இயக்குநர் இவர்தான்..!

நடிகர் சூரி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.சூரியுடன் முதல்முறையாக இயக்குநர் மதிமாறன் கைகோர்க்கிறார். வெற்றிமாறனுடன் இணைந்து பல படங... மேலும் பார்க்க

கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்! -நடிகர் அஜித்

கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வ... மேலும் பார்க்க