காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு!
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், தில்லியில் தீன் தயாள் உபாத்யா சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா காந்தி பவன் புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.
இதே சாலையில் 2016-ல் தலைமை அலுவலகம் கட்டத் தொடங்கிய பாஜக, 2018 ஆம் ஆண்டிலேயே பாஜகவின் தலைமை அலுவலகத்தைக் கட்டி முடித்தது.
இதையும் படிக்க:தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதியே இந்திரா காந்தி பவன் திறக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி, அலுவலகத்தின் திறப்புத் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திரா காந்தி பவனை சோனியா காந்தி புதன்கிழமை (ஜன. 15) திறந்து வைக்கிறார்.
இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக 24 அக்பர் சாலையில்தான் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வந்தது.