ம.பி: காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை கைது!
மாட்டுப் பொங்கல்: பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
மாட்டுப் பொங்கலையொட்டி பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள நிலையில், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் - சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் அழகை காண தினமும் உள்நாடு - வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இதையும் படிக்க: தென் கொரிய அதிபர் மீதான கைது நடவடிக்கை மீண்டும் தோல்வி!
தற்போது தொடர் விடுமுறை என்பதாலும் மாட்டுப் பொங்கல் என்பதாலும் அதிகாலை முதலிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோயிலில் குவிந்துள்ளனர்.
மேலும், நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.