செய்திகள் :

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி தமிழக அரசு சொன்னது என்ன? தெற்கு ரயில்வே

post image

சென்னை: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் தொடர்பான கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டு பதிலளித்துவிட்டதால் குழப்பம் நேர்ந்திருப்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் திட்டத்துக்கான நில ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது என்று கூறியிருக்கும் தெற்கு ரயில்வே மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சப்தம் அதிகமாக இருந்ததால், தனுஷ்கோடி ரயில் திட்டம் பற்றி கேட்கப்பட்டதாக நினைத்து அது தொடர்பான பதில் தரப்பட்டது. எனவே, அன்றைய தினம் ரயில்வே அமைச்சர் அளித்த பதில் தனுஷ்கோடி திட்டம் பற்றியது. அதில்தான், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையால் தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கில் இருப்பதாக தமிழக அரசு கடிம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த விளக்கத்தை மதுரை - தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலாக அளித்துவிட்டதால் குழப்பம் நேரிட்டது என்று தெற்கு ரயில்வே அளித்திருக்கும் விளக்கத்தின் மூலம் தெரிய வந்தது.

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம்!

ரயில் பயணிகள் மற்றும் ரயில் பாதை இல்லாத பகுதியைச் சேர்ந்த மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் கடந்த 1999 -2000-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 143.5 கி.மீ. தொலைவு பாதையைக் கொண்டதாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அண்டை மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர ரயில் போக்குவரத்து வசதி இல்லாத அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் எனவும், தூத்துக்குடி துறைமுகத்தையும், மதுரை விமான நிலையத்தையும் இணைக்கக் கூடிய திட்டமாக இருப்பதால், இந்தத் திட்டத்தின் மூலம் மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களின் வணிகப் பொருளாதாரம் மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

திட்டத்தின் முதல் கட்டப் பணிகளாக தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் -மேல்மருதூா் வரையிலான 18 கி. மீ. தொலைக்கு கடந்த ஆண்டு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இருப்பினும், மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் இந்தத் திட்டப் பணிகள் தொடா்பான முன்னெடுப்புகள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

இந்த நிலையில், மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது, மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான், விருதுநகா், மதுரை மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதன்மூலம், இந்தப் புதிய அகல ரயில் பாதைத் திட்டம் மீண்டும் புத்துயிா் பெற்றதால் ரயில் பயன்பாட்டாளா்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அடைந்தனர்.

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம்: அமைச்சர் சிவசங்கர்!

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது ... மேலும் பார்க்க

ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே, பொங்கல் பண்டிகைக்காக நீர் நிலையில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். பொங்கல் நாளில் நேரிட்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள... மேலும் பார்க்க

இந்தியாவால் ஐபோன் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி! தமிழ்நாடும் சாதனை!

தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றது.ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கைப் பெற்றுள்ளது. ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இந்தியாவில... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டும் பரிசுகளும்!

பொங்கல் திருநாளின் தொடர்ச்சியான மாட்டுப் பொங்கல் நாளன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க