செய்திகள் :

``காளி போன்ற பெண்கள் ராணுவத்திற்கு வேண்டும்’’ - ராணுவ தளபதி உபேந்திர த்விவேதி!

post image

ருடாந்திர ராணுவ செய்தியாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி (Upendra Dwivedi), "பெண் அதிகாரிகள் ராணுவத்தில் மிக சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய ராணுவம் எதிர்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளை நியமிக்க உள்ளது. காளி தாயை போன்ற வலிமையான பெண் அதிகாரிகள் இந்திய ராணுவத்துக்கு வேண்டும். பெண்களை சாதாரண ராணுவ வீரர்களாக நியமிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்" என கூறினார்.

இந்திய ராணுவம

மேலும் பேசிய த்விவேதி, "ராணுவத்தில் தற்போது 115 பெண் அதிகாரிகள் கமாண்ட் யூனிட்டில் பணியாற்றுகின்றனர்.18 பேர் கமாண்ட் யூனிட்டில் சேர தயார் நிலையில் உள்ளனர். பெண் அதிகாரிகளை பல துறைகளிலும் கண்ட நேரடி அனுபவம் எனக்கு உள்ளது. எங்கு பார்த்தாலும் பெண் அதிகாரிகள் மிக பக்குவமாகவும் மிக அக்கறையோடும் அன்பானவர்களாகவும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

பைலட்களாக பெண் அதிகாரிகள் உள்ளனர். சுமார் 1700 பெண்கள் தற்போது ராணுவப் பள்ளிகளில் மருத்துவப்பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் இந்திய ராணுவம் மற்றும் முப்படைகளில் சேவை செய்யவிருக்கிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். பாலின நடுநிலைமை நோக்கி சமூகத்தையும் ராணுவத்தையும் தயார்ப்படுத்த வேண்டும்”என உணர்வெழுச்சியுடன் கூறினார்.

ராணுவ தளபதி உபேந்திர த்விவேதி

தவிர, ராணுவத்தில் சேவை புரிந்த பெண் கர்னல் போனுங் டோமிங் (Ponung Doming)கை பற்றிப் பேசுகையில், ’’போனுங் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் கடினமான சாலைகளில், நிலத்தடி குகைகளில் பணிபுரிந்திருக்கிறார். மிக உயரமான எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் இருந்த படையின் கமாண்டராக இருந்த முதல் பெண் அதிகாரி அவர்’’ என பாராட்டினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

’’பெண்களையும் சிறுமிகளையும் அழிக்கப் பார்க்கிறார்கள்’’ - பாகிஸ்தான் மாநாட்டில் கொதித்த மலாலா..!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கடந்த ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் கலந்துகொண்டு தாலிபன்கள... மேலும் பார்க்க

Pakisthan: மீண்டும் தாய்நாட்டுக்கு செல்லவிருக்கும் மலாலா! காரணம் இதுதான்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் கல்வியை வளர்க்... மேலும் பார்க்க

நொய்டா: பெண் பயிற்சியாளர்களை நியமிக்க மகளிர் ஆணையம் பரிந்துரை; காரணம் இதுதான்!

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் பெண் பயிற்சியாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டுமென்று நொய்டாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

`வாஷ் ரூம் கேமராவுக்கு பயந்துக்கிட்டிருக்கும் என் பேத்திக்கு...' - ஒரு பாட்டியின் வாட்ஸ்அப் மெசேஜ்

அன்புள்ள பேத்திக்கு,``உன் பாட்டியோட whatsapp மெசேஜ். கடிதம் எழுதற காலத்துல நான் பிறந்தேன். நீயோ ஸ்மார்ட்போன் காலத்துல பிறந்தவ. உனக்கு ஒரு தகவல் சொல்லணும்னா அதை வாட்ஸ்அப்ல அனுப்புனா மட்டும்தான் உன் கவன... மேலும் பார்க்க

Rewind 2024: உலகை திரும்பிப் பார்க்க வைத்த 10 பெண்கள்!

'நாடாளுமன்றத்தில் நடனமாடிய' ஹனா-ராஹிட்டி மைபி-கிளார்க்Top 10 Women1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில், 21 வயதே ஆன முதல் இளம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஹனா-ராஹ... மேலும் பார்க்க