முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப...
23 தீவிரவாதிகள் கைது! வரைபடங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்!
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்மாகாணத்தின் லாஹூர் நகர் பகுதியில் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தடைசெய்யப்பட்ட டிடிபி எனும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஃபித்னா உல் குவார்ஜ் (டிடிபி) எனும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 7 பேரிடம் இருந்து வெடிகுண்டுகளும், அந்நகரத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களின் வரைபடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பிரிட்டன் மருத்துவமனையில் கத்திக்குத்து: இந்திய செவிலியர் கவலைக்கிடம்
இதுகுறித்து, பஞ்சாப் மாகாண காவல் துறையினர் கூறுகையில், இவர்கள் 23 பேரும் கைது செய்யப்பட்டதின் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர்கள் 23 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, தங்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப் மாகாணத்தின் லாஹூர், ஜேலும், சியால்கோட், ரவால்பிண்டி, குஜராத், மியான்வல்லி, சர்கோதா மற்றும் பைசலாபாத் ஆகிய மாவட்டங்களில் சுமார் 200 அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிதுள்ளனர்.