காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்: ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்!
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!
திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வழித்தடத்தில் முதல்முதலாக 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இன்று(ஜன. 15) அதிகாலை மணிக்கு 6.05 புறப்பட்டது.
அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டது.