செய்திகள் :

ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

post image

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே, பொங்கல் பண்டிகைக்காக நீர் நிலையில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். பொங்கல் நாளில் நேரிட்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்த சம்பவம் குறித்து, குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி கிராமத்தில் வசிப்பவர்கள், தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை குளிப்பாட்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படி ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராக்கி பட்டி கிராமத்தைச் சேர்ந்த, சங்கர் என்பவரின் 14 வயது புதல்வி ஸ்ரீ கவியும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவரின் 9 வயது புதல்வன் பிரதீப் ராஜாவும், தாங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை குளிப்பாட்ட அருகில் உள்ள குட்டைக்குச் ஓட்டி சென்றனர்.

அவருடன் ஸ்ரீகவியின் தாத்தா ராஜேந்திரன் உடன் சென்றிருந்தார். ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக ஸ்ரீகவியும், பிரதீப் ராஜாவும் கால் தவறி தண்ணீரில் மூழ்கினர், இதனை கண்ட ராஜேந்திரன் கூச்சல் எழுப்பினார் . இதனையடுத்து அக்கம்-பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்... மேலும் பார்க்க

உத்திரமேரூர் ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள்! நடந்தது என்ன?

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று பள்ளி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மூன்று இளைஞர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காய... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம்: அமைச்சர் சிவசங்கர்!

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது ... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி தமிழக அரசு சொன்னது என்ன? தெற்கு ரயில்வே

சென்னை: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் தொடர்பான கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டு பதிலளித்துவிட்டதால் குழப்பம் நேர்ந்திருப்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.மதுரை - தூத்துக்குடி இடைய... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள... மேலும் பார்க்க