``அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி" -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெ...
Congress: `இந்திரா பவன்' காங்கிரஸின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு... | Photo Album
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்திரா பவன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி சோனியா காந்தி திறந்துவைத்தார்.
இதன் மூலம், 24, அக்பர் சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் இருந்து 9A, கோட்லா சாலை, புது டெல்லி என்ற முகவரிக்கு மாறியுள்ளது காங்கிரஸ் தலைமை அலுவலகம்.
திறப்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.