காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்: ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்!
பிராட் பிட்டுடன் டேட்டிங்; ரூ.7 கோடி அவுட்; AI பயன்படுத்தி மோசடி!
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் 'டேட்டிங்' செய்வதாக நம்பி 7 கோடி ரூபாயை இழந்திருக்கிறார், ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த 53 வயதான இன்டீரியர் டிசைனர் ஆன் (Anne).
2023 பிப்ரவரி மாதம், அழகான பள்ளத்தாக்கு புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் ஆன். இதன்பிறகு, ஆனுக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில் பேசிய ஒரு பெண்மணி, தான் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் தாயார். என் மகனுக்கு உங்களைப் போன்ற ஒரு பெண்தான் துணையாக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மறுநாள், பிராட் பிட் போல தோற்றமளித்த ஒருவர், வீடியோ கால் வழியாக ஆனுடன் பேசியிருக்கிறார். அப்போது, ‘உங்களைப் பற்றி என் தாயார் மிகவும் நன்றாக கூறியுள்ளார். உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் சந்தேகத்துடன் இருந்த ஆன், அந்தப் போலி பிராட் பிட்டின் அழகான கவிதைகளாலும், இனிமையானப் பேச்சுக்களாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவர்கள் நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதையடுத்து ஆன், அவரின் கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்தின்போது ஆனுக்கு பெரிய அளவில் ஜீவாம்ச தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்பிறகுதான், அந்தப் போலி தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறான்.
ஆனுக்கு சில பரிசுகளை அனுப்பிய போலி பிராட் பிட், அவற்றுக்கான சுங்க கட்டணத்திற்கு பணம் அனுப்புமாறு கேட்டிருக்கிறான். பிறகு, தனக்கு கிட்னியில் புற்றுநோய் இருப்பதாக கூறி, மருத்துவ செலவுக்காக ஆனிடம் பணம் கேட்டிருக்கிறார். சொத்து பிரச்னை நீதிமன்றத்தில் நடப்பதால் என் பணத்தை பயன்படுத்த முடியவில்லை என அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லியிருக்கிறான் அந்த போலி பிராட் பிட். ஆனை வீடியோ காலில் தொடர்பு கொண்ட மருத்துவர்களும் இந்த செய்தியை உறுதி செய்ய, 53 லட்சத்தை அனுப்பியிருக்கிறார் ஆன்.
2024 மே மாதம் நிஜ பிராட் பிட்டின் காதலியைப் பற்றிய செய்திகள் இணையத்தில் வெளியாக, ஆன் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டிருக்கிறார். 7 கோடி ரூபாய் பண இழப்பு, மன அழுத்தம், விரக்தியால் உந்தப்பட்ட ஆன் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தவர், தற்போது போலீசில் புகார் அளித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை சில மோசடிப் பேர்வழிகள் ஏமாற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது. கவனமா இருங்க மக்களே..!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...