பங்கு முதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் டெக்னிக்கல் அனாலிசிஸ்; எப்படி பயன்படுத்துவது? முழுமையான பயிற்சி
பங்குச் சந்தை சமீப காலங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. காரணம், சந்தையில் இப்போதைக்கு அரசு அங்கீகரித்துள்ள முதலீடுகளில் பங்குச் சந்தைதான் அதிக லாபம் கொடுப்பதாக இருக்கிறது.
ஆனால், பங்குச் சந்தை அதிக லாபம் கொடுப்பதாக இருந்தாலும் மிகவும் ரிஸ்க்கானது என்பதையும் மறுக்க முடியாது. அதற்காகப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை விட்டுவிட முடியுமா? சந்தையின் வளர்ச்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டவும், ரிஸ்க்குக் குறைத்து முதலீட்டைப் பாதுகாக்கவும் உதவுவதான் டெக்னிக்கல் அனாலிசிஸ்.
பங்குச் சந்தையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் சில நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு இறங்கினால் நிச்சயம் நம்மால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
எந்த நிறுவனப் பங்கை வாங்கலாம், என்ன விலையில் வாங்கலாம், நாம் வாங்கிய விலையிலிருந்து எவ்வளவு விலை உயரும், இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி அடையுமா, எப்போது அந்தப் பங்கை விற்க வேண்டும் என்பதெல்லாம்தான் பங்குச் சந்தையில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை.
எந்தப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும், நாம் எடுக்கக்கூடிய ரிஸ்க் எவ்வளவு, அதன் பலன் என்ன என்பதையெல்லாம்தான் டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் பார்ப்போம்.
இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது எல்லோருக்கும் கைவரக்கூடிய விஷயமல்ல. அதைப் படித்தோ, வீடியோக்களில் பார்த்தோ புரிந்துகொள்ள முடியாது. அதைச் சரியான நிபுணத்துவம் கொண்ட நபர்கள் சொல்லித்தந்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
எனவேதான் 'பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை கோவையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். வருகிற ஜனவரி 4-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இது நடைமுறை ரீதியிலான பயிற்சி வகுப்பு என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம், டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம், டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.6,000 மட்டுமே ஆகும். உங்கள் வருகையை முன்பதிவு செய்ய: Click Here
ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
இன்னும் சில இருக்கைகளே உள்ளன. இன்னும் சில நாள்களே உள்ளன. முன்பதிவு செய்ய: Click Here