கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
சென்னையில் இன்றும், நாளையும் கைப்பந்து தோ்வு போட்டிகள்
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டிக்கான தோ்வு போட்டி சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 26, 27) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சக்கரவா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025 ஆம் ஆண்டு மூத்தோருக்கான தேசிய கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 7 முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூா் நகரில் நடைபெற உள்ளது.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான தோ்வுப் போட்டிகள் சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 27, 28) நடைபெவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.