மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது.
மூவர் சதம் விளாசல்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 586 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியில் மூவர் சதம் விளாசி அசத்தினர்.சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 154 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் 110* ரன்களும், கேப்டன் கிரைக் எர்வின் 104 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம்: ஸ்டீவ் ஸ்மித்
அவர்களைத் தொடர்ந்து, பென் கரண் அதிகபட்சமாக 68 ரன்களும், கைட்டானோ 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் காஸன்ஃபர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜாகீர் கான், ஸியா உர் ரஹ்மான், நவீத் ஸத்ரன் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தான் அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.