செய்திகள் :

"என் கல்யாண வாழ்க்கை ஒரு வருஷம் கூட நீடிக்கல; அதுக்குள்ள குழந்தை எப்படி..?'' - நடிகை சுகன்யா

post image

மிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கிறது. குறிப்பாக, 90-களில். சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை சுகன்யா.

Actress Sukanya

ஒரு குட்டிப் பொண்ணுக்கூட நடிகை சுகன்யா இருக்கிற போட்டோ ஒண்ணு அடிக்கடி வைரலாகும். உடனே நெட்டிசன்ஸ் எல்லாம், 'அது, சுகன்யாவோட பொண்ணு. சுகன்யா சிங்கிள் பேரன்ட்'னு வதந்தியைக் கிளப்பி விடுவாங்க. இதனால, சமீபத்துல மனசு நொந்துபோன சுகன்யா, ''அய்யோ... அவ என் பொண்ணு இல்லீங்க. என் அக்கா பொண்ணு. நானும் என் அக்கா பொண்ணும்னு சொல்லித்தான் அந்த போட்டோவை என் சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணியிருந்தேன். அதையும் மீறி அவளை என் பொண்ணுன்னு வதந்தி பரப்பினா, நான் என்ன செய்யுறது? என் கல்யாண வாழ்க்கை ஒரு வருஷம்கூட நீடிக்கலைன்னு நான் வெளிப்படையா சொல்லியிருக்கேன். இதுக்கு மேலயும் எனக்கொரு குழந்தையிருக்குன்னு சொல்றவங்களை நினைச்சா வருத்தமா இருக்கு''னு சமீபத்திய பேட்டி ஒண்ணுல தன் மனக்குமுறலை ஷேர் பண்ணியிருந்தார் சுகன்யா.

சினிமாவோ அல்லது பர்சனல் விஷயங்களோ... எதுவானாலும் ரொம்ப பொறுமையா, தன்மையா டீல் பண்ணக்கூடிய பக்குவப்பட்ட நடிகையான சுகன்யா, சினிமால நடிக்க வந்தது எப்படி... தமிழ் சினிமால பெயர் போன நடிகையா புகழ்பெற்றது எப்படி? 'காதோரம் லோலாக்கு'னு இவர் ஆடிய பாட்டுக்கும், இவரின் நடிப்புக்கும், ஹோம்லியான முக வசீகரத்துக்கும், பரவச சிரிப்புக்கும் 1990-கள்ல பெரிய ரசிகர் படையே இருந்த சுவாரஸ்யமான வரலாற்றைத்தான் இந்த கட்டுரைல பார்க்கப் போறோம்.

Actress Sukanya

பரத நாட்டிய டான்ஸர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர், ஓவியர், சிங்கர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்னு சுகன்யாவுக்குப் பன்முகங்கள் உண்டு. அதுல ஒண்ணுதான் சிறந்த நடிகை. இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும், 'நீ எந்த கேரக்டருக்கும் மோல்டாவே'னு சுகன்யாவைப் பெருமிதத்துடன் பாராட்டியிருக்காங்க. இப்படிப்பட்ட சுகன்யா, பெரிய கனவோடு சினிமா ஃபீல்டுக்கு வந்தாரான்னு கேட்டா, இல்ல... இல்லவே இல்லன்னுதான் சொல்லணும்.

''சின்ன வயசுல நான் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவேனாம். அதைப் பார்த்துட்டுதான் எங்கம்மா, என்னையும் அக்கா கீதாவையும் கலாஷேத்ராவுல சேர்த்து விட்டாங்க. ஏழு வருஷங்கள் கத்துக்க வேண்டிய டான்ஸ் கோர்ஸை, அஞ்சு வருஷத்துல முடிச்சேன். 1980-கள்ல, 'ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா'ங்கிற நிகழ்ச்சி, ரஷ்யாவுல நடந்துச்சு. அங்க நம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் ரஷ்ய அதிபர் கார்பசேவும் மீட் பண்ணி பேசினாங்க. அந்த ஃபங்ஷன்ல என்னோட டான்ஸ் நிகழ்ச்சியும் இருந்துச்சு. 1988-ல இதே நிகழ்ச்சி ஜெர்மனியில நடந்துச்சு. அங்கேயும் நான் டான்ஸ் ஆடினேன். இதெல்லாம் என் ஸ்கூல் டேஸ்ல நடந்த இனிமையான சம்பவங்கள். இப்படி பாட்டு, டான்ஸ், கோலம், டெய்லரிங்னு என்னோட ஆர்வம் இருந்ததால, நான் அதிகமா சினிமாகூட பார்த்ததில்ல. அதுவரைக்கும், சினிமால நடிப்போம்னு கனவுலயும் நான் நினைச்சதில்லை. ஆனா, எங்கப்பா புரொடியூஸர்ங்கிறதால, நிறையா வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், எல்லாத்துக்கும் 'நோ' சொல்லிட்டே இருந்தேன். டான்ஸ்தான் என்னோட எதிர்காலம்னு தீர்மானமா இருந்தேன்!'' அப்படினு, சினிமாவுக்கு வர்றதுக்கு முன்பு தனக்கிருந்த லட்சியத்தைப் பத்தி, பேட்டி ஒண்ணுல ரீவைண்டு பண்ணியிருக்காங்க சுகன்யா.

Actress Sukanya

சின்ன வயசுலயே தெளிவான இலக்கைக் கொண்டிருந்த இவங்க, 'புது நெல்லு புது நாத்து' படத்துல ஹீரோயின் ஆனது அழகான சின்ட்ரெல்லா கதை. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ, சில துணிக்கடைகளுக்குச் சுகன்யா மாடலா நடிச்சிருக்காங்க. அந்த போட்டோஸ் 'கரகாட்டக்காரன்' படம் எடுக்கிற பிளான்ல இருந்த டைரக்டர் கங்கை அமரன் கண்ல பட்டிருக்கு. ஒரு டான்ஸ் புரோகிராமுக்காக ஃப்ளைட்ல போயிட்டிருந்த சுகன்யாவை, அதே ஃப்ளைட்ல பயணிச்ச கங்கை அமரன் பார்க்க, 'என் படத்துல நீ தாம்மா நடிக்கணும்'னு சொல்லியிருக்கார். பதறிப்போய் 'நோ' சொல்லியிருக்கார் சுகன்யா. அடுத்து ’வைகாசிப் பொறந்தாச்சு’ வாய்ப்பு வந்திருக்கு. அதுக்கும் 'நாட் இன்ட்ரஸ்ட்'னு சுகன்யா சொல்லிட்டாராம்.

’கேளடி கண்மணி’க்காக வசந்த் கேட்க, அவருக்கும் அதே பதிலைச் சொல்லியிருக்கார். இதுக்கு நடுவுல பாரதிராஜா தன் 'புது நெல்லு புது நாத்து' படத்துக்காக கேட்க, 'படிப்பும் டான்ஸும்தான் என்னோட எதிர்காலம்'னு அவருக்கும் நோ சொல்லியிருக்கார் சுகன்யா. இன்னும் சிலர் சுகன்யாவைத் தங்களோட படத்துல நடிக்கக் கேட்க, 'பாரதிராஜா சார் படத்துல கமிட் ஆயிட்டேன்'னு சொல்லி தப்பிச்சிருக்கார். அவங்க, சுகன்யா சொன்னதை அப்படியே பாரதிராஜாகிட்ட சொல்ல, 'ஓ... என் படம் பண்றேன்னு சொல்லிட்டாளா அந்தப் பொண்ணு'ன்னு அவர் மறுபடியும் சுகன்யாகிட்ட கேட்க, இந்த ஒரு படம் மட்டும் நடிச்சிருவோம்னு குடும்பமா சேர்ந்து முடிவெடுத்திருக்காங்க. அந்த நேரத்துல சுகன்யா ப்ளஸ் டூ தான் படிச்சுக்கிட்டு இருந்திருக்கார்.

சினிமால நடிக்கிறதுன்னு முடிவானதும், சுகன்யாவோட அப்பாவும், அம்மாவும் அவங்ககிட்ட என்ன சொன்னாங்க அப்படிங்கிறதை சுகன்யாவே ஒரு இன்டர்வியூல சொல்லியிருக்காங்க.

Actress Sukanya

''சினிமா ஃபீல்டுக்கு போயிட்டா நிறைய கிசு கிசு வரும். அதுல பொய்யான வதந்திகளும் இருக்கும். அதையெல்லாம் உன்னால தைரியமா ஹேண்டில் பண்ண முடியும்னா, நீ தாராளமா நடிக்கலாம்னு அப்பா சொன்னார். அம்மா, உன்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் நடிப்புல மட்டும் கவனம் செலுத்தினா, எந்த வதந்தியாலயும் உன்னை ஒண்ணும் செய்ய முடியாதுன்னு தைரியம் கொடுத்தாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் என்ன மாதிரியான வதந்திகள் வந்தாலும் சப்போர்ட்டுக்கு நம்மகூட அப்பாவும், அம்மாவும் இருக்காங்க. அப்புறம் என்ன பயம்னு 'புது நெல்லு புது நாத்து' படத்துல நடிக்க மனசளவுல ரெடியாகிட்டேன்" - மனதளவுல தன்னைச் சரியா பக்குவப்படுத்திக்கிட்டு சினிமாவுக்கு வந்த சுகன்யாவுக்கு, முதல் பட அனுபவம் எப்படி இருந்திருக்கும்?

"'நீங்க அழுது ஆக்ட் பண்ணணும். கண்ணுல கிளிசரின் போட்டுக்கோங்க'னு சொன்னாங்க. கண்ணுல எதையோ ஊத்த சொல்றாங்களேன்னு பயந்துட்டு, நானே அழுதிடுறேன்னு சொல்லி அப்படியே செஞ்சேன். எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. அந்தப் படத்துல ஹீரோயின் ’ஆங்’னு இழுத்து இழுத்துப் பேசணும். இது நமக்கு வருமான்னு பயந்தேன். ஆனா, பாரதிராஜா சார் இருக்க என்ன பயம்... அவர் நடிச்சுக் காட்டுறதை திருப்பி செஞ்சாலே போதுமே(!) சில காட்சிகளை பாரதிராஜா சார் எதிர்பார்த்ததைவிட நான் பெஸ்ட்டா நடிச்சிருக்கேன்போல. 'புதுமுகமான உன்கிட்ட இவ்ளோ இன்வால்வ்மென்ட்டை நான் எதிர்பார்க்கவே இல்லம்மா’னு பாராட்டினார்.'' - இந்த வார்த்தைகளை அந்த இன்டர்வியூல சொல்றப்போ, சுகன்யாவோட குரல்ல நெகிழ்ச்சியும் பெருமிதமும் போட்டிப்போட்டு மிளிர்ந்துச்சு.

Actress Sukanya

'புது நெல்லு புது நாத்து' படத்துல வர்ற 'கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்' பாட்டுலயும், 'சிட்டான் சிட்டான் குருவி' பாட்டுலயும் சுகன்யா வெளிப்படுத்திய எக்ஸ்பிரஷன்ஸூம் ஆட்டமும் துள்ளலும் அதகளமா இருக்கும். இதுக்கப்புறமா, சுகன்யாவுக்கு ஓஹோன்னு பேர் வாங்கிக் கொடுத்த படம் 'சின்னக்கவுண்டர்'. அந்தப் படத்துல மனோரமா ஆச்சிக்கு இணையா கொங்குத் தமிழ் பேசி ஆச்சர்யப்படுத்தியிருப்பாங்க சுகன்யா. அதுலயும், விஜயகாந்த் தோட்டத்துல புளி திருடுறது, மனோரமாகூட ஏட்டிக்குப் போட்டியா வாய்சவடால் விடுறது, விஜயகாந்த்துடன் பம்பரம் விடுற போட்டி, மொய் விருந்து வைக்கிறது, ஜெயிலுக்குப் போறதுனு ஒவ்வொரு சீன்லயுமே தேர்ந்த நடிகையா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. இந்த படத்துல நடிச்ச பிறகு, ரஜினியைத் தவிர மற்ற எல்லா டாப் ஹீரோக்களோடவும் நடிச்சாங்க சுகன்யா.

சுகன்யா நடிச்ச படங்களைக் கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா, அவற்றுல இவங்க நடிச்ச ஹீரோயின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் அதிகமாவே இருக்கும். ’வால்டர் வெற்றிவேல்’ படத்துல கண்ணுத்தெரியாத பொண்ணு கேரக்டர். ’திருமதி பழனிச்சாமி’யில சுகன்யாவோட டீச்சர் கேரக்டரைச் சுற்றித்தான் கதையே நகரும். ’செந்தமிழ்ப்பாட்டு’ல ஓர் அப்பாவிப்பெண்ணா தாக்கத்தை ஏற்படுத்தியவங்க, ’தாலாட்டு’ல டாக்டராவும், ’மகாநதி’யில சிறைக்கைதியின் மகளாவும், மண வாழ்க்கை கைகூடாத அபலைப்பெண்ணாகவும், ’நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே’னு உயிர்த்தியாகம் செய்யுற ’உடன்பிறப்பு’ நாயகியாகவும், 'மகாபிரபு'ல ஹீரோவை நல்வழிப்படுத்துற கல்லூரி விரிவுரையாளரா, ’இந்தியன்’ல கமலுக்கு நிகராக வயசான கெட்டப்லயும், ’சின்ன மாப்ளே’ படத்துல, கணவனை கண்மூடித்தனமா நம்புற மனைவியாவும் தமிழ் சினிமாவுல காலத்துக்கும் பேர் சொல்லும்படியான நாயகியா முத்து முத்தா இவங்க செலக்ட் செஞ்ச கேரக்டர்களை அடுக்கிட்டே போகலாம்.

Actress Sukanya

சுகன்யா, கேரக்டர் ரோல்கள்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகும் ’ஆஹா’ படத்துல, மரணத்தருவாயில் இருக்கிற ஒரு முன்னாள் காதலி கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க. ‘குட்லக்’ படத்துல பொய் சொல்றது பிடிக்காத ஓர் அண்ணி கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க. ’எல்லாம் அவன் செயல்' படத்துல, தர்மத்தைக் காப்பாத்த எதையும் செய்யலாம்னு நினைக்கிற ஹீரோவோட அக்காவா நடிச்சிருப்பாங்க. 'சில்லுனு ஒரு காதல்' படத்துல போல்டான கேரக்டர் ரோல்லயும் கவனம் ஈர்த்திருப்பாங்க. கேரக்டரை செலக்ட் பண்றது பத்தி பேட்டி ஒண்ணுல சொன்ன சுகன்யா, ‘’என்னைத் தேடி மூணு படங்களுக்கான ஆஃபர்ஸ் வந்தா, அதுல ஒண்ணுதான் செலக்ட் பண்ணுவேன். அதனாலயே நான் நடிச்சதுல நிறைய படங்கள் 100 நாள்களைத் தாண்டி ஓடியிருக்கு. அப்படி செலக்ட் பண்ணி நடிச்சும் பொங்கல்னா ரெண்டு படங்கள், தீபாவளின்னா மூணு படங்கள்னு ரிலீஸாச்சு. எல்லாத்துக்கும் காரணம் என் அப்பாம்மா பிளெஸ்ஸிங்னுதான் சொல்வேன்’’னு நெகிழ்ச்சியா சொல்லியிருக்காங்க.

சுகன்யாவுக்குக் கிடைச்ச பாராட்டுங்க எல்லாமே தனித்துவமானவைதான். பாரதிராஜாவும் பாலசந்தரும் பாராட்டினதை ஏற்கெனவே கேட்டிருப்பீங்க. ’இந்தியன்’ படத்துல நடிச்சதுக்காக, ’எனக்கு அப்புறம் இப்படி ஒரு சேலஞ்சிங் கேரக்டர் பண்ண ஆர்ட்டிஸ்ட் நீ தாம்மா’ன்னு நடிகை செளகார் ஜானகி பாராட்டியிருக்காங்க. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல நந்திதா தாஸூக்கு ஸ்ரீலங்கன் தமிழ் உச்சரிப்புல பின்னணிக்குரல் கொடுத்த சுகன்யாவை, ’சென்சிபிள் டப்பிங் வொர்க்’னு எழுத்தாளர் சுஜாதா பாராட்டியிருக்கார். ’வால்டர் வெற்றிவேல் படத்துல நீங்க நடிக்கல, வாழ்ந்திருக்கீங்க’ன்னு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டியிருக்காங்க. சுகன்யாவைப் பேட்டி எடுத்த நிருபர் ஒருத்தர், ‘சுகன்யா வீடு முழுக்க விருதுகளா இருக்கும்’னு தன் கட்டுரையில குறிப்பிட்டிருப்பார். சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் அவார்டை மட்டுமே அஞ்சு முறை வாங்கியிருக்கார் சுகன்யா. 1990-கள்ல தமிழ் சினிமாவை தன் நடிப்பால ஆண்ட நடிகைகள்ல சுகன்யாவும் ஒருத்தர்ங்கிறதுக்கு இதைவிட அழுத்தமான ஆதாரம் வேணுமா என்ன?

நடிகை சுகன்யா

சீரியல்லேயும் 'சுவாமி ஐயப்பன்', 'ஜன்னல்', 'ஆனந்தம்'னு ஒரு ரவுண்டு வந்தாங்க சுகன்யா. இதுல, ’ஜன்னல்’ கே.பாலசந்தர் டைரக்ட் செஞ்ச சீரியல். அதுக்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு எல்லா மொழி டயலாக்கையும் ஒரே ஷாட்ல பேசுவாங்களாம் சுகன்யா. அந்த டயலாக் எல்லாத்தையும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்ல வெச்சுதான் தருவாராம் பாலசந்தர். சன் டி.வி.யில வந்த ’ஆனந்தம்’ சீரியல்ல கணவரை இழந்து, ஒரு குழந்தையோட இருக்கிற சுகன்யா, மறுமணம் செஞ்சுட்டுப்போற குடும்பத்துல வர்ற பிரச்னைகளைச் சரி செய்ற கேரக்டர்ல யதார்த்தமா நடிச்சிருப்பாங்க.

'சினிமா ஃபீல்டுக்கு போயிட்டா உன்னைப் பத்தி நிறைய கிசு கிசு வரும்’னு சுகன்யாவோட அப்பா சொன்னது, அவங்க வாழ்க்கையில அப்படியே நடந்துச்சு. அதையும் மனவுறுதியோட கடந்து வந்தார் சுகன்யா. பரதம்தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்ட சுகன்யாவுக்கு, அவரோட அப்பாம்மா 2002-ல கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. ஆனா, அந்த திருமண வாழ்க்கை ஒரு வருஷம்கூட நீடிக்கல. இவங்க, தன் விவாகரத்து விஷயத்தைப் பத்தியும் நேர்காணல் ஒண்ணுல ஓப்பனா சொல்லிருக்காங்க.

நடிகை சுகன்யா

’’விவாகரத்து செஞ்சுட்டு அம்மா வீட்டுக்குத் திரும்பி வந்தா நாலு பேரு என்ன சொல்லுவாங்கன்னு இந்தச் சமுதாயத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்ல. உங்க மனசாட்சிக்கு மட்டும் பயப்பட்டா போதும். பண்ணிக்கிட்ட மேரேஜ் சரியில்லைன்னா, அந்த வாழ்க்கையை விட்டு வெளியில வந்துடுங்க. திருமண வாழ்க்கையில நடக்கிற குடும்ப வன்முறைகளை ஓரளவுக்குத்தான் சகிச்சுக்க முடியும். முடியாதபட்சத்துல வெளியில வர்றதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு. இதுக்கெல்லாம் பொண்ணுங்க முடங்கிப் போகக்கூடாது!’’ - சுகன்யாவோட இந்த வெளிப்படையான ஸ்டேட்மென்ட், அவரோட வலியை அவரைப் பெத்தவங்களுக்கு மட்டுமில்ல... உலகத்துக்கே சொல்லுச்சு. கூடவே, திருமண வாழ்க்கை சரியா அமையலன்னா மனசொடிந்துபோய் தற்கொலை செஞ்சுக்க நினைக்கிற பல பெண்களுக்கு வழிகாட்டியாவும் இருந்துச்சு.

பரத நாட்டியம்தான் வாழ்க்கையின்னு அமைதியா வாழ்ந்துட்டிருக்கிற கலைமாமணி சுகன்யா மறுபடியும் தமிழ்ப் படங்கள்ல, சீரியல்கள்ல நடிக்கணும். சுகன்யாவோட நடிப்பைக் கொண்டாட அவங்களோட ஃபேன்ஸ் இன்னமும் வெயிட்டிங். வெல்கம் பேக் சுகன்யா!

- நாயகிகள் வருவார்கள்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

”ரம்யாவுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்தார்; ஏன்னா..!”- ரம்யா பாண்டியன் அம்மா

திருமணம் முடிந்த பூரிப்போடு தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.‘ஜோக்கர்’ மூலம் ரசிகர்களை அழ வைத்தவர். ‘ஆண் தேவதை’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என அடுத்தடுத்த... மேலும் பார்க்க

மதுரை: ``வாழும் காலம் வரை இதைச் செய்வோம்.." - எம்ஜிஆருக்கு வண்ணக்கோலமிட்ட தீவிர ரசிகர்!

அரசியலைக் கடந்து எம்ஜிஆரை விரும்புகிறவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் ஆத்மார்த்தமாக எம்ஜிஆர் புகழை பாடிக்கொண்டே இருப்பார்கள், அப்படி ஒருவர்தான் ஜெயக்குமார்.!எம... மேலும் பார்க்க

Rewind 2024: Manjummel Boys, Lucky Baskhar,... இந்த ஆண்டு தமிழில் கவனம் ஈர்த்த வேற்று மொழி படங்கள்

2024 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.இந்த ஆண்டில் கோலிவுட்டில் பல படங்கள் வெளியாகி வெற்றியடைந்திருந்தாலும் மற்ற மொழித் திரைப்படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடியிருந்தனர். அவ்வகையில் இ... மேலும் பார்க்க

''தங்கக்காசு அபிஷேகம்; கட்டிப்பிடிச்சு நடிக்கிறதுல விருப்பமில்ல'' - நல்லெண்ணெய் சித்ரா பர்சனல்ஸ்!

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள்... மேலும் பார்க்க

What to watch on Theatre and OTT: விடுதலை, Mufasa, Rifle, Marco, ED; இந்த வாரம் கொண்டாட்டம் தான்!

விடுதலை பாகம் 2 (தமிழ்)விடுதலை பாகம் - 2வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. முதல் பாகத்தில் குமரேசன் (சூரி), வாத... மேலும் பார்க்க

Squid Game: 'ஸ்குவிட் கேம் சீசன் 3' - அப்டேட் கொடுத்த நடிகர் லீ ஜங் ஜே

நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற, சர்வைவல் த்ரில்லர் தொடர், 'ஸ்குவிட் கேம்'.தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் தொடருக்கு, உலகம் முழுவதும்... மேலும் பார்க்க