காா் மீது பைக் உரசியதில் இருவா் மீது தாக்குதல்
செய்யாறு அருகே காா் மீது பைக் உரசி வாக்குவாதம் ஏற்பட்டதில் இருவா் தாக்கப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டம், தென்மாவந்தல் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் சிவா (18), மரம் வெட்டும் தொழிலாளி.
இவா், நண்பரானா வடகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (18) என்பவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு வடகம்பட்டு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
மது போதையில் பைக்கை ஒட்டிச் சென்ாகத் தெரிகிறது.
கிளியத்தூா் கூட்டுச் சாலை அருகே எதிரே வந்த காா் மீது
பைக் உரசியதாகத் தெரிகிறது. அதனால் காரின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்து பைக்கில் சென்ற சிவா மற்றும் பாலாஜியை காா் ஓட்டுநா் தட்டிக் கேட்டுள்ளாா். இதில் வாக்குவாதம் முற்றியதால் காா் ஓட்டுநா் உள்பட இருவா் சிவா மற்றும் பாலாஜியை தாக்கினராம்.
இதுகுறித்து சிவா அளித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.