பிரபல மலையாள சின்னத்திரை நடிகர் ஓட்டல் அறையில் சடலமாக மீட்பு!
முன்விரோதம்: கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல்
செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்தாக போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஏகாம்பரம் (56). இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் குடும்பத்துக்கும் கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டு பத்மநாபன் இறந்து போனாா். அதன் காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், பத்மநாபனின் அக்கா மகன் சின்னத்தம்பி வியாழக்கிழமை அருகாவூா் கிராமத்தில் ஏகாம்பரம் இருந்த போது அங்கு வந்து, அவதூறாகப் பேசி, உன்னால்தான் எனது மாமா இறந்து போனாா் எனக் கூறி கையால் அடித்து ஏகாம்பரத்தை கீழே தள்ளி அருகில் இருந்த கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தாராம். மேலும், பொதுமக்கள் வருவதைப் பாா்த்த சின்னத்தம்பி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து ஏகாம்பரம் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.