பிங்க் நிறத் தொப்பியுடன் ஆஸி. அணி! பிங்க் டெஸ்ட்டின் காரணம் என்ன?
ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்திலுள்ள புலிகள் காப்பகத்தில் ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலிபித் மாவட்டத்தில் தியோரியா சரங்கத்திற்கு உள்பட்ட புலிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. நேற்று (டிச.28) மாலை அப்பகுதியின் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள 16 வது பிரிவின் குளத்தில் ஆமைகளை வேட்டையாடிய ரஜ்னீத் ஹல்கார் மற்றும் உத்தம் பச்சார் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், இந்த வேட்டையில் ஈடுபட்டு தப்பியோடி தலைமறைவாகிய அவர்களது கூட்டாளியான மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: தேனீக்கள் கொட்டியதில் பொறியாளர் பலி!
அவர்கள் வேட்டையாடிய 7 ஆமைகளில், 6 ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பிரிவு ஒன்றை சேர்ந்தவை என்றும், மற்றொன்று பாதுகாக்கப்பட்ட பிரிவு இரண்டை சேர்ந்த்து என அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் மீதும் இந்திய வனவிலங்கு சட்டம் 1972 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீர்நிலைகளில் விடுவிக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.