நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லையப்பர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு, கஜ பூஜை, கோபூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புத்தாண்டு நல்லபடியாக அமைய வேண்டும் வரும் காலங்களில் அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.