செய்திகள் :

ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

post image

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி கண்டாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், அந்தச் சுற்றில் 6-7 (6/8), 3-6 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவால் வீழ்த்தப்பட்டாா். ஒபெல்காவின் கேரியரில் இதுவே அவரின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைக்கும் முனைப்பில் இருக்கும் ஜோகோவிச்சுக்கு இந்தத் தோல்வி சற்றே சறுக்கலாகியிருக்கிறது.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் 6-1, 2-1 என, 8-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனுடன் முன்னிலையில் இருந்தாா். அப்போது காயம் காரணமாக தாம்சன் விலக, டிமிட்ரோவ் வென்ாக அறிவிக்கப்பட்டாா். செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-4, 6-4 என்ற நோ் செட்களில் சிலியின் நிகோலஸ் ஜேரியை வெளியேற்றினாா்.

பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டு 7-5, 7-6 (7/5) என்ற கணக்கில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை சாய்த்தாா். இதையடுத்து அரையிறுதியில், பெரிகாா்டு - ஒபெல்காவையும், லெஹெக்கா - டிமிட்ரோவையும் சந்திக்கின்றனா்.

சபலென்கா வெற்றி: மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

அந்தச் சுற்றில் அவா், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா, 6-4, 7-6 (7/2) என்ற செட்களில் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியூரை வீழ்த்தினாா்.

உக்ரைனின் அன்ஹெலினா கலினினா 4-6, 6-1, 7-5 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் கிம்பா்லி பிரெலை தோற்கடித்து அரையிறுதிக்கு வந்துள்ளாா். அதில் அவா், ரஷியாவின் பாலினா குதா்மிடோவாவுடன் மோதுகிறாா்.

முன்னதாக பாலினா தனது காலிறுதியில், 7-6 (7/5), 6-3 என்ற செட்களில் அஷ்லின் குருகரை வென்றாா்.

தினப்பலன்கள்: மேஷம் - மீனம்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.06.01.2025மேஷம்:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குட... மேலும் பார்க்க

தென்மண்டல பல்கலை. ஹாக்கி: சென்னை, அண்ணாமலை, பாரதிதாசன் வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில் சென்னை, அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன. சென்னை பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் க... மேலும் பார்க்க

சத்தீஸ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கா் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் தமிழ்நாடு 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் சோ்க்க... மேலும் பார்க்க

சூர்யாவுக்கு வில்லனாக ஆர். ஜே. பாலாஜி!

சூர்யா - 45 படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் அப்டேட்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் கிங்ஸ்டன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8 வெற்றியாளர் பெயரைக் கூறிய அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நி... மேலும் பார்க்க