திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு
ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் அப்டேட்!
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் கிங்ஸ்டன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.
பேச்சிலர் திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதையும் படிக்க: உன்னி முகுந்தனின் மார்கோ ரூ. 100 கோடி வசூல்!
இப்படம் கடலை மையமாக வைத்து உருவாகிறது. மேலும், கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்படுகிறது. மீனவராகவே ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் நாளை (ஜன.7) மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.