மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை அவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று அறிவித்திருந்தார். இரண்டாவது நாள் கூட்டத்தில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 நாள்களிலும் பேரவை காலை 9.30 மணிக்குக் கூடும். தினமும் கேள்வி நேரம் நடைபெறும் எனறும் அப்பாவு தெரிவித்திருந்தார்.