மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்க...
100 சார் கேள்விகளை கேட்க முடியும்! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக அமளி; வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 100 சார் கேள்விகளை என்னால் கேட்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அவையில் இன்று ஸ்டாலின் பேசுகையில், பொள்ளாச்சி வழக்கில் அதிமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவே 12 நாள்கள் ஆனது.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகளை கேட்க முடியும் என்றார். அதாவது யார் அந்த சார்? என்ற பேட்ஜை அதிமுக உறுப்பினர்கள் அணிந்து வந்திருப்பதைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு உரையாற்றினார்.
யார் அந்த சார் என்பதை முடிந்தால் மத்திய அரசு உதவியுடன் கண்டுபிடியுங்கள் என்றும் முதல்வர் பேசினார்.
தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொறுப்புகளை உணர்ந்து முன்வைக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதல்வர் பேசியதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.