மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!
'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்
மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.ஜ.க, மாநிலத் தலைவரைத் தேசியத் தலைமை மூலம் அறிவிக்கும். மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார்.
மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவர் தேசியத் தலைமையால் இறுதி செய்யப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அடுத்த தலைவர் இவர்தான் என்று தமிழக பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் யூகங்களைப் பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் மதுரை பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், 'பிரேக்கிங் நியூஸ், பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகம்; பொதுமக்கள் வரவேற்பு., மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். வழி முழுவதும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு' என்று மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டன. அதே நேரம் பா.ஜ.க-விலுள்ள பல்வேறு கோஷ்டிகளின் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போஸ்டர்கள் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில நிர்வாகிகளான செந்தில்குமார் மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோரால் ஒட்டப்பட்டுள்ளன. தேசியத் தலைமை முறைப்படி அறிவிக்கும் முன் எப்படி இதுபோன்று போஸ்டர் போடலாம் என்று எதிர்க் கோஷ்டியினர் தேசியத் தலைமைக்கே புகாரை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...