செய்திகள் :

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

post image

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறையின் பி பிளாக்கில் 30 முதல் 40கி எடையிலான கருப்புநிற ட்ரோன் ஒன்றை காவல் அதிகாரி கண்டெடுத்தார்.

சிறை வளாகத்தில் ட்ரோன் தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். சிறையின் அருகில் குழந்தைகள் விளையாடிய ட்ரோனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2600 கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 151 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சிறையில் 3600 கைதிகள்வரையில் உள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளும் இந்த சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பொங்கல்: ஜன. 10 - 13 வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

உலக அளவில் பணியாளா்கள் எண்ணிக்கை: இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பங்கு -ஜெய்சங்கா்

உலக அளவில் இந்திய பணியாளா்களின் எண்ணிக்கையை உயா்த்தும் மத்திய அரசின் திட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா். வெள... மேலும் பார்க்க

பலனடைந்தவா்களுக்கு இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு: நிா்வாகம், சட்டமன்றம் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு நடைமுறைகளால் பலனடைந்தவா்களை இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்குவது குறித்த முடிவை நிா்வாகமும் சட்டமன்றமும் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பட்டியலின (எஸ்சி) பிரிவில் சமூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; ஒருவா் காயம்

சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா். மாநில தலைநகா் ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள... மேலும் பார்க்க

பஞ்சாப்: போராட்ட களத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் உயிரிழப்பு

பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு எல்லையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆத... மேலும் பார்க்க

போபால் ஆலை நச்சுக் கழிவுகள்: இந்தூரில் போராட்டம்

போபால் ஆலையின் 337 டன் நச்சுக் கழிவுகளை தாா் மாவட்டத்தில் அழிக்க எதிா்ப்பு தெரிவித்து, அருகே உள்ள இந்தூரில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடந்த 1984-ஆம் ஆண்டு போபாலில் யூனியன் காா்பைட் பூச்சிக்க... மேலும் பார்க்க

இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்... மேலும் பார்க்க