அமெரிக்காவில் காட்டுத் தீ! அண்டை வீட்டாருக்கு உதவிய கனடா பிரதமர்!
வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு!
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு ஸ்ரீரங்கம் உள்பட பெருமாள் கோயில்களில் இன்று(ஜன. 10) அதிகாலை நடைபெற்றது. ஆழ்வார் பசுரங்கள் பாராயணம் செய்தபடி சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வாகனத்தை கோயிலிலிருந்து எடுத்து வர, பின்தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசல் வழியாகச் சென்று வழிபட்டனர்.
108 வைணவத் திருத்தலங்களுக்கும் தலைமைப்பதியாகத் திகழும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. அங்கு இன்றிலிருந்து 10 நாள்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டேயிருக்கும்.
அதேபோல, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்பட தமிழகத்தின் பிற வைணவத் தலங்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயில்களுக்கு வருகை தந்திருந்ததால் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.