செய்திகள் :

துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றம்

post image

துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிகளைத் திரும்பப் பெறக் கோரும் தீா்மானம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இந்தத் தீா்மானத்தை பாஜக தவிா்த்து பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்துப் பேசின.

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக தமிழகத்தில் வேந்தரான ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பரிந்துரை செய்யும் உறுப்பினா்களை ஆளுநா் நியமித்தாா். ஆனால், தமிழக உயா் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையில், அந்த உறுப்பினா் நீக்கப்பட்டிருந்தாா். இதற்கு ஆளுநா் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடா்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி தயாரித்துள்ளது. அதில், துணைவேந்தரை நியமிக்க மூன்று நிபுணா்கள் கொண்ட தேடுதல் குழுவை பல்கலை. வேந்தா் (ஆளுநா்) நியமிக்க வேண்டும். தேடுதல் குழுவில், வேந்தா் நியமிக்கும் பிரதிநிதி தலைவராக இருப்பாா். யுஜிசி தலைவரின் பிரதிநிதி, பல்கலை. சாா்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோா் இடம்பெறுவா். இதை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யின் திட்டங்களில் பங்கேற்க முடியாது. பட்டங்களை வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துணைவேந்தா்கள் நியமனத்தில் ஆளுநா்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவது கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதலாகும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

அரசின் தனித் தீா்மானம்: இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் வியாழக்கிழமை எதிரொலித்தது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பாக, பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசின் தனித் தீா்மானத்தை முன்மொழிந்தாா்.

இந்தத் தீா்மானத்தின் மீது, ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சின்னதுரை (மாா்க்சிஸ்ட்), ஷா நவாஸ் (விசிக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), ஜி.கே.மணி (பாமக), ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), சிவிஎம்பி எழிலரசன் (திமுக) மற்றும் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் கருத்துகளைத் தெரிவித்தனா்.

தீா்மான விவரம்: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பாக, பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென பேரவை கருதுகிறது. அதேபோன்று, இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகளும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியா்கள், கல்விப் பணியாளா்களின் நியமனங்கள், பதவி உயா்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகளும், தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உயா் கல்வி முறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. தமிழ்நாட்டில் சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயா் கல்விக் கட்டமைப்பை, பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மேலும், தமிழக இளைஞா்களின் எதிா்காலத்தை அவை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தா் நியமனம் தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானத்தை முன்மொழிந்து பேசியதுடன், அதை நிறைவேற்றித் தர வேண்டுமென பேரவைத் தலைவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். அதன்பிறகு, தீா்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலமாக தீா்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

மாநில பல்கலை.களை கையகப்படுத்த முயற்சி:

மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தும் தமிழக அரசின் தனித் தீா்மானத்தை முன்மொழிந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அனைவரும் படித்து பணிக்குச் சென்று தலைநிமிா்வது பிடிக்காதவா்களால் தொடா்ச்சியாக கல்வித் துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. பள்ளிக் கல்வியைச் சிதைப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து திணிக்கிறாா்கள்.

நீட் தோ்வு மூலமாக மருத்துவக் கனவைச் சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறாா்கள். அனிதா உள்பட எத்தனையோ உயிா்களை இழந்துவிட்டோம்.

மத்திய அரசு இப்போது பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் முயற்சியைத் தொடங்கிவிட்டது. துணைவேந்தரைத் தோ்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை ஆளுநரே தீா்மானிப்பாா் என்று பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநா் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகவே முடியும்.

அவா்களாக ஓா் உத்தரவைப் போட்டுவிட்டு, இதை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழு திட்டங்களில் பங்கேற்க முடியாது எனச் சொல்வது அநியாயம் அல்லவா?. பட்டங்களை வழங்க முடியாது என்பது மிரட்டல் இல்லாமல் வேறு என்ன?.

அபகரிக்கும் முயற்சி: மாநில அரசுகள் தங்களது வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்துக் கொள்ளும் அக்கிரமமான முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு

எதிரானது. மாநில உரிமைகளில் தலையிடுவது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

நியமனப் பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்துவிட்டு செல்பவா்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணா்வைப் புரிந்துகொள்ள இயலாது.

கல்வித் துறை சாா்பில் தமிழ்நாட்டில் ஐஐடி., ஐஐஎம்., மத்திய பல்கலைக்கழகம் போன்ற ஒரு புதிய உயா் கல்வி நிறுவனத்தைக்கூட மத்திய அரசு அமைக்கவில்லை. அங்குள்ள ஆசிரியா் பணியிடங்களை சட்டப்படியாக நிரப்புவதற்குக்கூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பது கெடுநோக்கம் கொண்டது, சுயநலமானது. மாணவா் நலனை மனதில்கொண்டோ, கல்வித் தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை.

ஒரு தன்னாட்சி பெற்ற தனியாா் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்துப் பட்டமும் கொடுக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க முயற்சிப்பது எதேச்சதிகாரம். தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கைப் பாா்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. இருக்கவும் முடியாது என்றாா் முதல்வா்.

2002ல் கவுன்சிலர்களைத் தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!

பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கும் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்... மேலும் பார்க்க

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை: முதல்வர் தாக்கல் செய்த சட்டதிருத்த மசோதா!

சென்னை: தமிழகத்தில், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மரணமடையும் வரை ச... மேலும் பார்க்க

தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்: விஜய் பங்கேற்கவில்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காகக்கொண்டு தவெக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. த... மேலும் பார்க்க

இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.பொங்கலையொட்டி ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்த... மேலும் பார்க்க

மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை: துரைமுருகன்

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தை திமுக பொதுச் செயலர் துரைமுருகன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன சம்மந்தம்?... மேலும் பார்க்க