சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்: விஜய் பங்கேற்கவில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.
எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காகக்கொண்டு தவெக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தவெக மாவட்ட செயலா்களுடன் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளா்களை நியமிப்பது குறித்து வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு விஜய் ஒப்புதல் அளித்தவுடன், விரைவில் மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.