Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
உலக நன்மை வேண்டி மூன்றாவது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியவர்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்று வருகிறார். இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் - நொடியின்றி வாழவும், மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கவு வேண்டியும் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.
சபரிமலைக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 8-ஆம் தேதி இருமுடி கட்டி சென்னையில் பயணத்தைத் தொடங்கி இவர் தஞ்சை வழியாக சபரிமலைக்குச் செல்கிறார்.
ஐந்து நாள்கள் பயணம் மேற்கொண்டு வருகிற 13-தேதி ஜோதி தரிசனம் காணச் செல்வதாகவும், மீண்டும் சைக்கிளிலே சொந்த ஊர் திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.