செய்திகள் :

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்- கிரிக்கெட் வீரர் நடராஜன்

post image

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்.... அனைத்து கிராமப்புறங்களிலும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஆனால் அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. இளைஞர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும். தமிழ்நாட்டில் பிறந்த வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன். குறிப்பாக கேப்டன்கள் கோலி, வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். தோனி தலைமையில் விளையாடியது இல்லை.

இந்திய அணி கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது குறித்த கேள்விக்கு?

விளையாட்டில் ஏற்றத் தாழ்வு இருப்பது சகஜம். தற்போது சில வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். அவர்கள் அடுத்தமுறை ரன் அடிக்கும் பொழுது அதை பெரிதாக பேசுவார்கள். சில போட்டிகளில் தோல்வியடைவது நம் கையில் இல்லை. இரண்டு தொடர்களில் தோல்வியடைந்ததை வைத்து நாம் எதுவும் கூற முடியாது.

ரொனால்டோவுக்கு மெஸ்ஸி பயிற்சியாளர்: ஜோகோவிச் - முர்ரே குறித்து மெத்வதேவ்!

அஸ்வின் ஹிந்தி மொழி குறித்து கருத்து கூறியுள்ளார், அதற்கு உங்களது கருத்து குறித்த கேள்விக்கு நடராஜன் பதில் அளிக்கவில்லை.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பீர்களா என்ற கேள்விக்கு?

கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

கிராமத்தில் இருந்து வந்த நான் இந்திய அணியில் தேர்வானதே பெரிய சாதனைதான். இனி வரும் காலங்களில் கிராமத்து இளைஞர்கள் நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்பதற்காக எனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து கொடுத்துள்ளேன். நிறைய மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்தார்.

பொங்கல்- புதுச்சேரியில் ஜன.16, 17இல் அரசு விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஜன.16,17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14- ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும்: அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று மாலை, மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்... மேலும் பார்க்க

சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்... மேலும் பார்க்க

சீமான் கருத்து - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப... மேலும் பார்க்க

தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.சட்டப்பேரவை விவாதத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப... மேலும் பார்க்க

இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் 9 நாள்கள் பொங்கல் விடுமுறை

கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் இவ்விரண்டு மாவட்ட மக்களுக்கும் பொங்கலுக்கு 9 நாள்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது.ஆருத்ரா தரிசனத்தையொ... மேலும் பார்க்க