தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவை விவாதத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் 12 நாள்கள் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், தனது கருத்தை தவறு என எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், தண்டனை பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார், முதல்வர் ஸ்டாலின். ஒருவேளை, தான் கூறியதை நிரூபிக்கப்பட்டு விட்டால், எடப்பாடி பழனிசாமி தண்டனை பெற்றுக்கொள்ளத் தயாரா? என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
இதையும் படிக்க:நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்
அதற்கான ஆதாரங்களையும் பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அடுத்த நாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறிது மௌனமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதாகத் கூறினார்.