தாயும் குழந்தையும் தீயில் கருகி பலி! தந்தை தற்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் வீட்டில் பற்றிய தீயில் தாயும் குழந்தையும் பலியாகினர். தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின் கம்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குப்தா (வயது 25) தனியாக வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சந்தானி குப்தா (20) என்ற மனைவியும் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையும் ஒன்று இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜன.10) இவர்களது வீட்டில் பற்றிய தீயில் உடல் கருகி பலியான நிலையில் சந்தானி குப்தா மற்றும் அவர்களது குழந்தை ஆகிய இருவரது உடலும் கைப்பற்றப்பட்டது. பின்னர், அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சுரேஷ் குப்தாவின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மலப்புரம் திருவிழாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் பலி!
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் மூவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, மனைவியையும் குழந்தையையும் தீயிட்டு கொளூத்தி கொலை செய்துவிட்டு, சுரேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிகப்பட்டு வரும் நிலையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.