செய்திகள் :

Kangana Ranaut: ``பாலிவுட்டை ஆளும் 3 கான்களை வைத்து இயக்க தயார்'' - கங்கனா ரனாவத்

post image

எப்போதும் சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற நடிகை கங்கனா ரனாவத் புதிதாக எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் கங்கனா மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார். இப்படம் சென்சார் போர்டு பிடியில் சிக்கி இருந்தது. கடந்த செப்டம்பர் 8-ம் தேதி படம் வெளியாக இருந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகுதான் படத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

மிகுந்த பொருள் செலவில் இப்படத்தை தயாரித்துள்ள கங்கனா ரனாவத் இப்படத்திற்காக வாங்கிய கடனுக்காக தனது மும்பை வீட்டை விற்பனை செய்துவிட்டார். இப்போது படம் வரும் 17-ம் தேதி வெளியாக இருக்கிறார். சமீப காலமாக கங்கனா நடித்த படங்கள் சரியாக போகவில்லை. எனவே, எமர்ஜென்சி படமும் தோல்வி அடைந்ததால் கங்கனாவிற்கு பெரிய பின்னடைவாக அமையும். எனவே எமர்ஜென்சி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கரண் ஜோகருடன் கங்கனா

கங்கனா ரனாவத் பாலிவுட்டில் எதிர்காலத்தில் யாரை இயக்குவது என்பது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் மூன்று கான்களையும் இயக்க வாய்ப்பு கிடைத்தால் சரியான கதை அமைந்தால் அவர்களை இயக்க தயாராக இருக்கிறேன். அவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

கரண் ஜோகரின் தயாரிப்பில் நீங்கள் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ''அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து நடித்தால் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னால் நல்ல படம் தயாரிக்க முடியும். அது மாமியார் மருமகள் சண்டையை கொண்டதாக இருக்காது என்று தெரிவித்தார்.

கங்கனா ரனாவத்

இதற்கு முன்பு கங்கனா ரனாவத் கடந்த 2017-ம் ஆண்டு காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் கரண் ஜோகரை வில்லனாக பார்க்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

தற்போது கரண் ஜோகருக்கும், கங்கனா ரனாவத்திற்கும் இடையே உறவு சரியில்லாமல் இருக்கிறது. ஆனால் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கானுடன் கங்கனா சுமூக உறவை பேணி வருகிறார். சமீபத்தில் தனது படத்தை விளம்பரப்படுத்த சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். அதோடு ஷாருக்கான் மகன் ஆர்யன் கானையும் சமீபத்தில் புகழ்ந்து தள்ளினார்.

`மகனின் படம் ஹிட்டானால் புகைப்பிடிப்பதை கைவிட்டு விடுவேன்’ - சபதம் செய்துள்ள நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மகன் ஜுனைட் கான் புதிதாக லவ்யபா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஹூரோயினாக நடித்துள்ளார். இது குஷி கபூருக்கு பெரிய... மேலும் பார்க்க

``வாங்க `எமெர்ஜென்சி' திரைப்படம் பார்க்கலாம்!'' - பிரியங்கா காந்தியிடம் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்

இந்தியாவில் 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தபடுத்தபட்ட எமெர்ஜென்சியை கதைக் கருவாக வைத்து, `எமெர்ஜென்சி' என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமா... மேலும் பார்க்க

`அழைப்பிதழ் அடித்தும் நின்று போன திருமணம்..!' - சல்மான் கான் உடனான உறவு குறித்து சங்கீதா பிஜ்லானி

பாலிவுட்டில் திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் நடிகர் சல்மான் கான் மட்டுமே. சல்மான் கான் தனது வாழ்க்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்தார்... மேலும் பார்க்க

New Year: ஆனந்த் அம்பானியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்பத்துடன் குஜராத் சென்ற ஷாருக்கான்!

பாலிவுட் நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராய் புத்தாண்டை கொண்டடுவதற்கு தனது மகளுடன் வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதே போன்று ஒவ்வொரு நடிகரும் தங்... மேலும் பார்க்க

Baby John Review: 'விஜய் குமாரை மிஞ்சுகிறாரா சத்ய வர்மா?' - எப்படி இருக்கிறது 'தெறி' இந்தி ரிமேக்?

2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த 'பேபி ஜான்'. 'அதே டெய்லர் அதே வாடகை' என்கிற பாணியில்தான் இந்தி ரீமேக்கின் கதையையும் நகர்கிறது.கேரளத்தில் அப்பாவியாக வா... மேலும் பார்க்க

SRK: பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டமா? பிரபல நடிகரின் பேரனுடன் படகில் புறப்பட்ட ஷாருக்கான் மகள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் முதல் முதலாக நடிகர் அமிதாப்பச்சன் பேரன் அகஷ்திய நந்தாவுடன் சேர்ந்து வெப்சீரியஸ் ஒன்றில் நடித்தார். அதிலிருந்... மேலும் பார்க்க