செய்திகள் :

`அழைப்பிதழ் அடித்தும் நின்று போன திருமணம்..!' - சல்மான் கான் உடனான உறவு குறித்து சங்கீதா பிஜ்லானி

post image

பாலிவுட்டில் திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் நடிகர் சல்மான் கான் மட்டுமே. சல்மான் கான் தனது வாழ்க்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்தார். ஆனால் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடனான காதலை விரும்பாமல் துண்டித்துக்கொண்டு அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். அதேசமயம் அவரை காதலித்த சல்மான் கான் இது வரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யா ராயிக்கு பிறகு சல்மான் கானுடன் நடிகை கேத்ரீனா கைஃப் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அவரும் நடிகர் விக்கி கெஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு நடிகர் சல்மான் கானைக்கூட அழைக்கவில்லை.

நடிகை சங்கீதா பிஜ்லானி என்பவரை சல்மான் கான் 8 ஆண்டுகள் காதலித்தார். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், இப்போதும் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். சல்மான் கானின் பிறந்த நாள் உள்பட அவரது வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக ஆஜராகக்கூடியவர்கள் பட்டியலில் சங்கீதா பிஜ்லானிதான். இப்போதும் நல்ல நண்பர்களாக இருந்து கொண்டிருக்கிறார்.

இப்போது சல்மான் கான் வெளிநாட்டு பெண்ணான யூலியா வந்தூர் என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் இப்போது மும்பையில் நிரந்தரமாக தங்கி இருக்கிறார். சல்மான் கான் திருமணம் செய்யாமல், திரைப்படங்கள் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சல்மான் கான் நடிகை சங்கீதா பிஜ்லானியை காதலித்தபோது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்தது. திருமண அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனதாக அப்போது கூறப்பட்டது.

இது குறித்து சங்கீதா பிஜ்லானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பெசி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், "உங்களுக்கும், சல்மான் கானுக்கும் திருமணத்திற்கு அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையா?" என்று சங்கீதா பிஜ்லானியிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சங்கீதா பிஜ்லானி, "உண்மைதான். அது பொய் கிடையாது என்று தெரிவித்தார்."

இருவரும் 8 ஆண்டுகள் காதலித்தனர். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் திடீரென நின்றதற்கான காரணம் குறித்து வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் சல்மான் கான் வாழ்க்கையில் திடீரென பாகிஸ்தான் நடிகை சோமி அலி புகுந்ததால்தான் இத்திருமணம் நின்றதாக கூறப்படுகிறது. சோமி அலி அச்செய்தியை பின்னர் உறுதிபடுத்தினார்.

சல்மான் கானுடனான உறவு முறிந்த பிறகு சங்கீதா பிஜ்லானி கிரிக்கெட் வீரர் அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1996ம் ஆண்டு அவர்களது திருமணம் நடந்தது. 14 ஆண்டுகள் நன்றாக சென்று கொண்டிருந்த திருமணம் 2010-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

அசாருதீனுக்கு விளையாட்டு வீராங்கனை ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சங்கீதா பிஜ்லானி நிரந்தமாக மும்பைக்கு வந்து குடியேறிவிட்டார். அது முதல் சல்மான் கானும், சங்கீதா பிஜ்லானியும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.!

`மகனின் படம் ஹிட்டானால் புகைப்பிடிப்பதை கைவிட்டு விடுவேன்’ - சபதம் செய்துள்ள நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மகன் ஜுனைட் கான் புதிதாக லவ்யபா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஹூரோயினாக நடித்துள்ளார். இது குஷி கபூருக்கு பெரிய... மேலும் பார்க்க

``வாங்க `எமெர்ஜென்சி' திரைப்படம் பார்க்கலாம்!'' - பிரியங்கா காந்தியிடம் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்

இந்தியாவில் 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தபடுத்தபட்ட எமெர்ஜென்சியை கதைக் கருவாக வைத்து, `எமெர்ஜென்சி' என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமா... மேலும் பார்க்க

New Year: ஆனந்த் அம்பானியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்பத்துடன் குஜராத் சென்ற ஷாருக்கான்!

பாலிவுட் நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராய் புத்தாண்டை கொண்டடுவதற்கு தனது மகளுடன் வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதே போன்று ஒவ்வொரு நடிகரும் தங்... மேலும் பார்க்க

Baby John Review: 'விஜய் குமாரை மிஞ்சுகிறாரா சத்ய வர்மா?' - எப்படி இருக்கிறது 'தெறி' இந்தி ரிமேக்?

2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த 'பேபி ஜான்'. 'அதே டெய்லர் அதே வாடகை' என்கிற பாணியில்தான் இந்தி ரீமேக்கின் கதையையும் நகர்கிறது.கேரளத்தில் அப்பாவியாக வா... மேலும் பார்க்க

SRK: பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டமா? பிரபல நடிகரின் பேரனுடன் படகில் புறப்பட்ட ஷாருக்கான் மகள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் முதல் முதலாக நடிகர் அமிதாப்பச்சன் பேரன் அகஷ்திய நந்தாவுடன் சேர்ந்து வெப்சீரியஸ் ஒன்றில் நடித்தார். அதிலிருந்... மேலும் பார்க்க

Sonu Sood: ``இதற்காகத்தான் எனக்கு வந்த முதல்வர் பதவி ஆஃபரை மறுத்தேன்'' - நடிகர் சோனு சூட் ஓபன் டாக்

பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட், Fateh என்ற பாலிவுட் படத்தின் மூலம் இயக்குநராகவும் பாலிவுட்டில் தடம் பதிக்கவிருக்கிறார். இவரே தயாரித்து நடிக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவரத் திட்ட... மேலும் பார்க்க