New Year: ஆனந்த் அம்பானியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்பத்துடன் குஜராத் சென்ற ஷாருக்கான்!
பாலிவுட் நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராய் புத்தாண்டை கொண்டடுவதற்கு தனது மகளுடன் வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதே போன்று ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கு இஷ்டமான இடத்திற்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கின்றனர்.
நடிகர் சல்மான் கான் ஏற்கெனவே தனது பிறந்தநாளை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் காம்ப்ளக்ஸில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இதில் ஆனந்த் அம்பானி, நிதா அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் போன்றோருடன் சேர்ந்து சல்மான் கான் பல அடுக்கு கேக் வெட்டி தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதோடு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகாவுடன் சேர்ந்து சல்மான் கான் ஷாப்பிங் மால்களில் ஷாப்பிங் செய்தார். தற்போது ஷாருக்கானும் தனது குடும்பத்தோடு ஜாம்நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
விமான நிலையத்திற்குச் சென்ற போது டி சர்ட்டுடன் கூடிய தொப்பியால் தனது முகத்தை மறைத்தபடி ஷாருக்கான் சென்றார். அவருடன் அவரது மனைவி கெளரி கான், மகன் ஆப்ராம் ஆகியோர் கைகோர்த்தபடி மும்பை கலீனா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட ஷாருக்கான் முடிவு செய்துள்ளார்.