SRK: பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டமா? பிரபல நடிகரின் பேரனுடன் படகில் புறப்பட்ட ஷாருக்கான் மகள்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் முதல் முதலாக நடிகர் அமிதாப்பச்சன் பேரன் அகஷ்திய நந்தாவுடன் சேர்ந்து வெப்சீரியஸ் ஒன்றில் நடித்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையேயான நட்பு உருவானது.
சமீப காலமாக இருவரும் சேர்ந்து வெளிப்படையாகப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட சுஹானா கான் கலந்து கொண்டு வருகிறார். நேற்று (டிசம்பர் 26) மாலை சுஹானாவும், அகஷ்தியா நந்தாவும் படகு மூலம் புறப்பட்டு, அருகிலுள்ள கடற்கரை நகரான அலிபாக் சென்றனர். இதற்காக இருவரும் மும்பை கேட்வே ஆப் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆடம்பர படகு மூலம் அலிபாக்கிற்குப் புறப்பட்டனர்.
அலிபாக்கில் கடற்கரை மற்றும் மலைகளுக்கு அருகில் மிகப்பெரிய பண்ணை வீடு நடிகர் ஷாருக்கானுக்கு இருக்கிறது. 23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு கொண்டது அந்த பண்ணை வீடு. அவர்களுடன் மேலும் சில பாலிவுட் நண்பர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுஹானாவும், அகஷ்தியா நந்தாவும் படகிற்கு நடந்து சென்றது மற்றும் படகில் இருவரும் இருப்பது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கின்றன. சுஹானா தனது தந்தை ஷாருக்கானுடன் சேர்ந்து கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...