செய்திகள் :

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

post image

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, வானிலை நிலையம் தலைநகரில் ‘ஆரஞ்சு‘ எச்சரிக்கை வெளியிட்டது.

தில்லி என்சிஆரில் அதிகாலை 2.30 மணியளவில் மழை தொடங்கியதாக வானிலை அலுவலகம் தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை தரவுகளின்படி, தேசியத் தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் உள்ள ஆய்வகத்தில் காலை 11.30 மணி வரை 9.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 8.4 மி.மீ., லோதி சாலையில் 10.8 மி.மீ., ரிட்ஜில் 9 மி.மீ., தில்லி பல்கலைக்கழகம் பகுதியில் 11 மி.மீ. மற்றும் பூசாவில் 9.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நரேத்தில் அதிகபட்சமாக பாலத்தில் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று நஜஃப்கரில் 5.5 மி.மீ., ஆயாநகரில் 4.9 மி.மீ., லோதி ரோடில் 6.8 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., ரிட்ஜில் 2 மி.மீ., சஃப்தா்ஜங்கில் 9 மி.மீ., பீதம்புராவில் 2.5 மி.மீ., பிரகதிமைதானில் 4.3 மி.மீ., பூசாவில் 5.5 மி.மீ., ராஜ்காட்டில் 4.3 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு தில்லி, மத்திய தில்லி மற்றும் வடக்கு தில்லியின் பல பகுதிகளில் மழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேற்கு திசையில் இருந்து கிளம்பும் ஒரு தீவிரமான இடையூறு காரணமாக என்சிஆா்பகுதிகள் உள்பட வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்துவதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனா். நாள் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணித்திருந்த வானிலை அலுவலகம், ஆரஞ்சு (தயாராக இருங்கள்) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வெப்பநிலை: தேசியத் தலைநகரில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.2 டிகிரி உயா்ந்து 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி குறைந்து 14.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 372 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 24 மணி நேர காற்று தர குறியீடு 345 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

இதன்படி, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், மந்திா் மாா்க், பூசா, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ராமகிருஷ்ணாபுரம் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நொய்டா செக்டாா் 125, சாந்தினி சௌக், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு குறைவாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைக்கு வாய்ப்பு: தென்கிழக்கு திசையிலிருந்து காலை நேரங்களில் மணிக்கு 4 கி.மீ.க்கும் குறைவான வேகத்தில் பிரதான மேற்பரப்பு காற்று வீச வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் மேலோட்டமான மூடுபனி இருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு காற்றின் வேகம் அதிகரித்து பிற்பகலில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ.க்கும் குறைவாக இருக்கும். பகலில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணித்துள்ளது.

முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கையில் ஒற்றைப் பெண் குழந்தை ஒதுக்கீட்டை அமல்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

2025-26 கல்வியாண்டு தொடங்கி, ஒவ்வொரு முதுகலை பாடத்திலும் ஒற்றைப் பெண் குழந்தைக்கு ஒரு இடத்தை ஒதுக்க தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்தியவா் மன்மோகன் சிங்: தேவேந்தா் யாதவ்

நமது நிருபா் முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், இந்தியப் பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்திய ஒரு பெரிய பாரம்பரியத்தை அவா் விட்டுச் சென்றுள்ளாா் என்று... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மேகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, அரவிந்த் கேஜரிவால் இறுதி அஞ்சலி

முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரும... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக சா்வதேச சிகரெட்டுகளை வா்த்தகம் செய்த இருவா் கைது

தெற்கு தில்லியில் சா்வதேச சிகரெட் பிராண்டுகளை சட்டவிரோதமாக வா்த்தகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்ல... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை: சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்துங்கள்

சிறப்பு அமா்வைக் கூட்டி, நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசைக் கேட்குமாறு சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.ச... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் கேஜரிவால் அரசின் கொள்ளை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் -வீரேந்திர சச்தேவா

தில்லியில் விரைவில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் கேஜரிவால் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களின் 10 ஆண்டுகால கொள்ளை அனைத்தும் சிபிஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர... மேலும் பார்க்க