செய்திகள் :

மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு!

post image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கை நிகம்போத் காட் பகுதியில் நடத்தியதன் மூலம் மத்திய பாஜக அரசு அவரை அவமதித்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் நடத்தப்பட்டது. அரசு மரியாதையுடன் அங்கிருந்த தகன மேடையில் அவரது உடல் இன்று எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கினை தனி இடத்தில் நடத்தாமல் பொதுவான மயானத்தில் வைத்தது தொடர்பாக அரசியல் களத்தில் சர்ச்சை வெடித்துள்ளத்து.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இந்தியத் தாயின் சிறந்த மகனும், முதல் சீக்கியப் பிரதமருமான டாக்டர். மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கை நிகம்போத் காட் பகுதியில் நடத்தியதன் மூலம் மத்திய அரசு அவரை அவமதித்துவிட்டது.

இதையும் படிக்க | விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

அவரது பதவிக் காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் மிகச் சிறந்து விளங்கியது. அவரது கொள்கைகள் சமூகத்தில் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக விளங்கி வருகின்றன.

பாரம்பரியமாக அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களின் இறுதிச்சடங்கில் அதற்கென தயார் செய்யப்பட்ட தனி நினைவிடத்தில் வைத்து இறுதி மரியாதைகள் செய்யப்படும். இதன் மூலம் அவர்களின் மகத்தான பங்களிப்புகளைக் கௌரவிப்பதோடு மட்டுமின்றி பொதுமக்களுக்கு எந்தச் சிரமமுமின்றி இறுதி மரியாதையைச் செலுத்தும் வாய்ப்பையும்வழங்குகின்றன.

இதையும் படிக்க | ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!

மிகச்சிறந்த தலைவரும், சீக்கிய சமூகத்தின் சின்னமாக இருந்தவருமான மன்மோகன் சிங் இதுபோன்ற உயர்ந்த மரியாதையும் தனி நினைவிடத்தையும் பெற தகுதியானவர். அரசு இந்த மரபை காப்பாற்றி அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்கி அவருக்கு உரிய மரியாதையை வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும், இதிஉல் பாஜக மோசமான விதத்தில் அரசியல் செய்வதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மறைவுகள் 2024

ஜன. 9: ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசைக் கலைஞரும், பிரபல பாடகருமான உஸ்தாத் ரஷீத் கான் (55) புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபோது கொல்கத்தாவில் காலமானார். ஜன. 25: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், ... மேலும் பார்க்க

விருதுகள் 2024

ஜனவரி9: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.25: ஐசிசியின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒர... மேலும் பார்க்க

மணிப்பூா்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்!

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தௌபால் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி காவல்துற... மேலும் பார்க்க

ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்

ஆங்கில புத்தாண்டு நெருங்குவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அயோத்தி மட்டுமின்றி அதன் அருகிலுள்ள பைசாபாத் நகரிலும் பெரும்பாலான விடுதியறைக... மேலும் பார்க்க

பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி. ராமாராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகனுமான எம்எல்ஏ கே.டி.ராமா ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனு... மேலும் பார்க்க

111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு

கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ... மேலும் பார்க்க