செய்திகள் :

Indigo Airlines: தொழில் நுட்ப கோளாறு... மும்பை விமான நிலையத்தில் பயணிகள் 16 மணி நேரம் தவிப்பு!

post image

மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துருக்கியில் இருக்கும் இஸ்தான்புல் என்ற இடத்திற்கு இண்டிகோ விமானம் ஒன்று நேற்று அதிகாலையில் புறப்படுவதாக இருந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் வந்து காத்திருந்தனர். காலையில் விமானம் திட்டமிட்டபடி கிளம்பவில்லை. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பயணிகள் குழந்தைகளுடன் பலமணி நேரம் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தனர். ஆரம்பத்தில் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சோசியல் மீடியாவில் தங்களது குறைகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். பயணிகள் பல முறை விமானத்தில் ஏற்றப்பட்டு பின்னர் இறக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் பயணிகள்

4 மணி நேரம் தாமதம் என்று சொன்ன இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் இறுதியில் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது. விமான ஊழியர்கள் பயணிகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை. அதோடு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தது. அதிகமான பயணிகள் இஸ்தான்புல் நகரத்தில் இருந்து வேறு விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். அந்த விமானத்தை பயணிகள் தவறவிட்டனர். இது தொடர்பாக பயணிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக நேற்று இரவு 11 மணிக்கு மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் இஸ்தான்புல் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், பயணிகள் 16 மணி நேரம் மும்பை விமான நிலையத்தில் காத்துக்கிடந்து இஸ்தான்புல் சென்றனர்.

விமானம் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான நிறுவனம், ``பயணிகளுக்கு தங்குமிடம், சாப்பாடு கொடுக்கப்பட்டது. மேலும், பயணிகளின் டிக்கெட் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

சாப்பாடு பரிமாற தாமதம், மணப்பெண்ணை மாற்றி வேறு திருமணம் செய்த மணமகன்... உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

திருமணம் என்றாலே சிறு சிறு கலாட்டாக்கள் இருக்கத்தான் செய்யும். அந்த கலாட்டா சில நேரங்களில் திருமணம் நின்று போகும் அளவுக்கு கூட இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் சாப்பாட்டில் ரொட்டி தாமதமாக கொண்டு வந்து க... மேலும் பார்க்க

Rajasthan: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து 6 நாள்களாக உயிருக்கு போராடும் சிறுமி... என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் கோத்புத்லி என்ற இடத்தில் உள்ள 700 அடி ஆழ்குழாய் கிணற்றில் 3 வயதாகும் சேத்னா என்ற சிறுமி கடந்த திங்கள் கிழமை தவறி விழுந்துவிட்டார். அவரை மீட்க மாவட்ட நிர்வாகம் கடந்த 5 நாள்களாக போராடி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்பா?

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. தாவூத் இப்ரா... மேலும் பார்க்க

Fitness: ``65 வயதில் 20 போல உணர்கிறேன்" - மூதாட்டியின் மிரளவைக்கும் புல்-அப்ஸ்; சீக்ரட் என்ன?

ஒரு வயதான பெண்மணியின் உடல் செயல்பாடுகளைப் பற்றிக்கேட்டால், அவர் குச்சியை வைத்துக்கொண்டு தடுமாறி நடப்பதுதான் உங்கள் நினைவுக்கு வரும். ஒரு கம்பியில் திடமாக புஷ்-அப் எடுப்பதை கற்பனை செய்து பார்க்கவே கடின... மேலும் பார்க்க

சுனாமி: ``பாம்புகளுக்கு நடுவில் பெற்றெடுத்தேன் சுனாமியை.." - பேரலை நினைவுகளை பகிர்ந்த தாய்!

உலகை உலுக்கிய நிகழ்வுகள் என்ற பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் 2004-ம் ஆண்டு வந்த சுனாமி எனும் பேரலைக்கு மிக முக்கிய இடமிருக்கும். உறவுகளையும், நம்பிக்கையையும் இழந்து, இதிலிருந்து எப்போது மீளுவோம் என... மேலும் பார்க்க

Vinod Kambli: வினோத் காம்ப்ளி உடல்நிலை கவலைக்கிடம்; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிறது. அவர் சமீபத்தில் மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் தனக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்... மேலும் பார்க்க