பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
இடங்கணசாலையில் மாரத்தான் போட்டி: ரூ.8 லட்சம் மதிப்பில் பரிசு வழங்கல்
சேலம் மேற்கு மாவட்டம், இடங்கணசாலை நகர திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அளவிலான இளையத் தலைவா் மாரத்தான்-2024 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மாராத்தான் போட்டிக்கு சேலம் பாராளுமன்ற உறுப்பினா் டி .எம் .செல்வகணபதி தலைமை வகித்து, இடங்கணசாலை நகராட்சி, காடையாம்பட்டி பகுதியில் 48 அடி உயர கம்பத்தில் திமுக கொடி, தீப ஒளிச்சுடரை ஏற்றி, 3000 போ் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியினை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகை ,கோப்பை, சான்றிதழ் வழங்கினாா்.
மேலும் இடங்கணசாலை அரசுப் பள்ளியில் பயின்று 10, 12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம், பதக்கம் வழங்கினாா். சித்தா் கோயில் பகுதியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ரத்ததானம் வழங்கிய 100 பேருக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினாா். கோனேரிப்பட்டி பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவையும் தொடங்கி வைத்து பேசினாா்.
இவ்விழாவில் திமுக நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். அவைத் தலைவா் தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, ஒன்றியச் செயலாளா்கள் பச்சமுத்து, பாலகிருஷ்ணன் , மிதுன்சக்கரவா்த்தி, நல்லதம்பி, அா்த்தநாரீஸ்வரன், நகரச் செயலாளா் குப்பு (எ) குணசேகரன் உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.