செய்திகள் :

`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது... 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?' - அண்ணாமலை கேள்வி!

post image

``ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? ; 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?" - அண்ணாமலை கேள்வி!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

``நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அன்பில் மகேஷ்

தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

”பேராவூரணி பேரூராட்சியில் ஊழல், வழக்கு தொடர்ந்த திமுக ஒப்பந்தராரர்”- ஆர்.காமராஜ்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் பேராவூரணி வ... மேலும் பார்க்க

பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்; எல்லாமே அரசு செய்யமுடியாது - மதுரை ஆதீனம்

"ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் போலீஸ் போட்டால், போலீசால் அந்த வேலை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும்" என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனம் (ஃபைல் படம்)மதுரையில் நட... மேலும் பார்க்க

தமிழிசை டெல்லி விசிட்.. போராடும் அண்ணாமலை... பரபரக்கும் பாஜக முகாம்!

பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.20... மேலும் பார்க்க

`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன்

புதுச்சேரி பா.ஜ.க-வின் நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அம... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" - ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறிய... மேலும் பார்க்க

திமுக கூட்டணி : அதிகரிக்கும் தோழமைகளின் கண்டிப்புகளும் பின்னணியும்!

திமுக கூட்டணி கட்சிகளின் கருத்துகள்!தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. சமீபகாலமாக திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் ... மேலும் பார்க்க