செய்திகள் :

மியான்மர்: சுதந்திர நாளை முன்னிட்டு 6,000 கைதிகள் விடுதலை!

post image

மியான்மர் நாட்டின் 77வது சுதந்திர நாளை முன்னிட்டு 6,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்யப்போவதாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆவுங் சன் சூகி தலைமையிலான குடியரசு ஆட்சியை கலைத்து அந்நாட்டு ராணுவம் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில், பிரிட்டன் ராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலைப் பெற்ற 77வது சுதந்திரநாள் இன்று (ஜன.4) தலைநகர் நைப்பியிதோவில் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராணுவ அரசின் தளபதி மின் அவுங் ஹிலைங் 77வது சுதந்திர நாளை முன்னிட்டு மியான்மர் நாட்டு சிறைகளில் உள்ள 5,864 உள்ளூர் கைதிகளும், 180 வெளிநாட்டு கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும்,144 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையானது 15 ஆண்டுகள் சிறை தண்டனையாகக் குறைக்கப்படும் எனவும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தீ விபத்தில் 579 செல்லப்பிராணிகள் பலி!

இதனைத் தொடர்ந்து, குண்டு வெடிப்பு தடுப்பு சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை தவிர சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகள் அனைவரது தண்டனைக் காலமும் ஆறில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு சிறைகளிலிருந்து கைதிகளை விடுதலை செய்யும் பணி இன்று (ஜன.4) காலை முதல் துவங்கியுள்ள நிலையில் இந்த பணி இன்னும் சில நாள்கள் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதில் எத்தனை அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை.

பொது விடுமுறை நாள்களில் மியான்மரில் சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக பின்பற்றப்பட்டு வருகிறது.

முன்னதாக, ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த 28,096 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், 21,499 பேர் அந்நாட்டு தற்போதுவரை சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மேலும், அந்நாட்டு முன்னாள் அதிபர் ஆவுங் சன் சூகிக்கு ராணுவம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநருக்கு எதிராக திமுக நாளை(ஜன. 7) கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து நாளை(செவ்வாய்க்கிழமை) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இ... மேலும் பார்க்க

சட்டப்பேரவையின் மரபு காக்கப்பட வேண்டும்: விஜய்

தமிழக சட்டப்பேரவையின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆள... மேலும் பார்க்க

ஆப்கானின் மீதான பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.ஆயுதம் ஏந்திய பயங்கர வாதக் குழுக்களுக்கு தலிபான் அரசு அடைக்கலம் தருவதாகவும் அதனால் தீவிரவாதிகள் பதுங்... மேலும் பார்க்க

இனி ஒரே அட்டையில் மெட்ரோ, மாநகரப் பேருந்தில் பயணிக்கலாம்!

சிங்கார சென்னை பயண அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) ... மேலும் பார்க்க

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்! 17 வயது மாணவன் கைது!

மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிகாரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறு... மேலும் பார்க்க

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் சென்றுள்ளது சிறுபிள்ளைத்தனமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ... மேலும் பார்க்க