செய்திகள் :

எச்எம்பிவி தொற்று: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கேஜரிவால் வலியுறுத்தல்!

post image

சீனாவில் புதிதாக பரவிவரும் எச்எம்பிவி தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் மக்களை அச்சுறுத்தி வரும் எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் காய்ச்சலால் கடந்த சில நாள்களாக அங்குள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தின் பெங்களூருவில் இரண்டு பேருக்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பு நாட்டையே உலுக்கியது. எனவே எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கட்டுப்படுத்துவது அவசியம். அதேசமயம் நிலைமையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும்.

பெங்களூருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாத பெண் பச்சிளம் குழந்தையும், எட்டு மாத ஆண்டு குழந்தையும் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 3 மாதக் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், 8 மாதக் குழந்தை சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் சர்வதேச பயணத்தின் வரலாறு இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எச்எம்பிவி ஏற்கனவே இந்தியா உள்பட உலகளவில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

எனவே, எச்எம்பிவி தொற்று மேலும் பரவாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, தில்லியின் சுகாதாரத் துறை சுவாச நோய்களால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மருத்துவமனைகளுக்கு ஆலோசனையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை- சக மருத்துவா் கைது

மத்திய பிரதேச மாநிலம் குவாலியா் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவா், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். அது தொடா்பாக அந்த மருத்துவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்... மேலும் பார்க்க

நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரா்களின் உடலுக்கு சத்தீஸ்கா் முதல்வா் அஞ்சலி

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரா்களுக்கு மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். சத்தீஸ்கா் மாநிலம் பீஜாபூா் மாவட்டத்தில் உள்ள அம்பே... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: இன்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்த... மேலும் பார்க்க

பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீதிமன்றம்

‘சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா்கள் அவையில் கருத்து வேறுபாட்டை அல்லது எதிா்ப்பை மரியாதைக்குரிய வகையில் பதிவு செய்யவேண்டும்’ என்று பிகாா் சட்ட மேலவையிலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சு... மேலும் பார்க்க

மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் பணியிடங்கள்: உடனடியாக நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மத்திய, மாநில தகவல் ஆணைய காலிப் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை அரசு முடக்கியது. புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியைச் சோ்ந்த குலாம் நபி தாா் என்ப... மேலும் பார்க்க