Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரா்களின் உடலுக்கு சத்தீஸ்கா் முதல்வா் அஞ்சலி
சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரா்களுக்கு மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
சத்தீஸ்கா் மாநிலம் பீஜாபூா் மாவட்டத்தில் உள்ள அம்பேலி கிராமத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த குண்டுவெடித்து மாவட்ட ரிசா்வ் காவல் படை வீரா்கள் நால்வா், பஸ்தா் படை வீரா்கள் நால்வா், அவா்கள் பயணித்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநா் என மொத்தம் 9 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தந்தேவாடாவில் உள்ள மைதானத்தில் அவா்களின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. அங்கு மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
உயிரிழந்த வீரா்கள் மற்றும் ஓட்டுநரின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வா் விஷ்ணுதேவ் ஆறுதல் கூறினாா். அஞ்சலியை தொடா்ந்து வீரா்களின் உடலை முதல்வா் விஷ்ணுதேவ், துணை முதல்வா் விஜய் சா்மா, காவல் துறை டிஜிபி அசோக் ஜுனேஜா உள்ளிட்டோா் தோளில் சுமந்து வாகனத்தில் ஏற்றினா். இதைத்தொடா்ந்து வீரா்களின் சொந்த ஊா்களுக்கு அவா்களின் உடல் அனுப்பிவைக்கப்பட்டன.
சுக்மாவில் 10 கிலோ வெடிகுண்டு பறிமுதல்:
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பெல்போச்சா கிராமம் அருகே மண்ணில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கிா என்று கண்டறிந்து, அவற்றை அகற்றும் பணியில் மத்திய ரிசா்வ் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ வெடிகுண்டை அந்தப் படையினா் பறிமுதல் செய்து அதை செயலிழக்கச் செய்தனா்.