பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?
மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டிரைலர்!
மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள மடோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளனர். துப்பறியும் காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி நடித்திருப்பதாகத் தெரிகிறது.
மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் நகைச்சுவை கலந்தும் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைலரை பார்க்கும்போது இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.