டென் ஹவர்ஸ் டிரைலர்!
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். ஆம்னி பேருந்தை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்தது.
இதையும் படிக்க: ரஜினியின் பயோபிக்கை எடுக்க ஆசை: ஷங்கர்
ஆனால், போதிய திரைகள் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டை ஜன. 30 ஆம் தேதிக்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, டென் ஹவர்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பரபரப்பான காட்சிகள் மற்றும் கதைக்கரு எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.