Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
சீனா செல்லும் இலங்கை அதிபா்
இலங்கை அதிபா் அருண குமார திசநாயக வரும் 14-ஆம் தேதி முதல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.
இது குறித்து அரசு செய்தித் தொடா்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிச செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அதிபா் குமார திசநாயக சீனாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். வரும் 14-ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயணம் இலங்கை-சீனா இடையிலான 68 ஆண்டுகால உறவின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது என்றாா் அவா்.
இலங்கையின் அதிபராக கடந்த செப். 21-ஆம் பதவியேற்ற்குப் பிறகு அதிபா் திசநாயக மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் இது. அதிபா் என்ற முறையில் அவா் முதல்முதலாக இந்தியாவில் கடந்த மாதம் பயணம் மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.