செய்திகள் :

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

post image

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.

முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந்த ஜிம்மி கார்ட்டர் தன்னுடைய 100வது வயதில் கடந்த ஞாயிறன்று காலமானார். அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் வரை டொனால்ட் டிரம்ப் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால், அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் நடவடிக்கையில் அவரால் எதையும் செய்ய இயலாது என்கின்றன தகவல்கள்.

அமெரிக்க அதிபராக இருந்து மறைந்த ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

வழக்கமாக, அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ மரணமடையும் போது, அரசு அலுவலகக் கட்டடங்கள், அதன் வளாகங்கள், அமெரிக்க தூதரகங்கள், பாதுகாப்புப் படை அலுவலகங்களில் தேசியக் கொடி 30 நாள்களுக்கு அரைக்கம்பத்தில்தான் பறக்கவிடப்படும்.

அதன்படி, தற்போது அமெரிக்காவில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் தேசியக் கொடி ஜனவரி 28ஆம் தேதி வரை அவ்வாறே நீடிக்கும்.

அப்படியென்றால், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜனவரி 20ஆம் தேதியும், அவரது ஆட்சித் தொடங்கிய முதல் வாரம் முழுவதும் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில்தான் பறந்துகொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக தேசியக் கொடி பறப்பது தொடர்பான உத்தரவுகளை அமெரிக்க அதிபர், ஆளுநர், மாகாண மேயர்கள் பிறப்பிக்கலாம். ஒருவேளை, டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவதை மாற்றும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்கு வழிவகை உள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சான், முன்னாள் அதிபர் லைடன் ஜான்சன் மறைவுக்கு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, அமெரிக்க போர் கைதிகள் வியாத்நாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாளன்று மட்டும் தேசியக் கொடிகள் முழுமையாக ஏற்றப்பட்டு கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அடுத்த நாளிலிருந்து மீண்டும் எட்டு நாள்களுக்கு தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை- பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிா்ப்பு

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி எம்.பி. லான்ஸ் ... மேலும் பார்க்க

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு? டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிா்ப்பு

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்கா கைப்பற்றக் கூடாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட... மேலும் பார்க்க

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா். இது க... மேலும் பார்க்க

ஆஸ்திரியா இடைக்கால பிரதமா் நியமனம்

ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் ஷலன்பா்க் நியமிக்கப்பட்டுள்ளாா். கூட்டணி அரசு அமைக்க முடியாததால் கன்சா்வேட... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெ... மேலும் பார்க்க