செய்திகள் :

கோவை: `பீப் போடக்கூடாது' - தள்ளுவண்டி கடை தம்பதியை மிரட்டிய பாஜக பிரமுகர்

post image
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி ஆபிதா. இந்த தம்பதி கடந்த சில நாள்களாக சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வருகிறார்கள்.
கோவை பாஜக பிரமுகர்

இவர்களின் கடைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஜக ஓபிசி அணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி சென்றுள்ளார். அப்போது அவர், “பீப் பிரியாணி ஆகாது. எந்தக் கடை வேண்டுமானாலும் போட்டுக்கோ. ஆனா பீப் போடாதே.” என்று கூறினார்.

அதற்கு ரவி – ஆபிதா தம்பதி, “எங்களுக்கு தெரிந்த தொழிலை நாங்க செய்யறோம். அப்படின்னா மீன் கடைல இருந்து எல்லாத்தையும் எடுக்கச் சொல்லுங்க. எங்களை இது பண்ணாதனு சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்ல.” என்று கூறினர். அதை ஏற்காத சுப்பிரமணி, “சொல்லிட்டே இருக்கேன். மறுபடியும் மறுபடியும் பண்ணா என்ன அர்த்தம்.” என்று மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீப் பிரியாணி

இந்தப் பகுதி கோவை மாநகராட்சியின் 12 வது வார்டில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமமூர்த்தி என்பவர் கவுன்சிலராக உள்ளார். “கம்யூனிஸ்ட் கவுன்சிலராக உள்ள வார்டிலேயே இந்த நிலையா.. அது உடையாம்பாளையமா இல்லை உத்தரப்பிரதேசமா.” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து ரவி மற்றும் ஆபிதா கூறுகையில், “நாங்கள் கிறிஸ்துமஸ் அன்று கடை போட்டோம். அப்போதே பாலசுப்பிரமணி வந்து, ‘கடை போடக் கூடாது’ என மிரட்டினார். வாழ்வாதாரத்துக்காக ரூ.50,000 கடன் வாங்கி இந்தத் தொழிலை தொடங்கியுள்ளோம். கவுன்சிலர் உள்ளிட்டோரிடம் அனுமதியும் வாங்கியுள்ளோம். அதனால் கடையை தொடர்ந்து நடத்தினோம். இதையடுத்து ஆள்களை அழைத்து வந்து மிரட்டினார்கள். அதனால் கடைக்கு யாருமே வராமல் நஷ்டம் ஏற்பட்டது.

பீப் கடை ரவி ஆபிதா

இதன் காரணமாக கடையே வேறு பகுதிக்கு மாற்றிவிட்டோம். இப்போதும் கடை போடக்கூடாது என மிரட்டுகிறார்கள். விருப்பப்பட்ட உணவை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதில் சிலர் சாதி மதம் பிரிவனைவாதத்துடன் செயல்படுகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.” என்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாலசுப்பிரமணி, “ஊர் கட்டுப்பாடு என்பதால் பீப் கடை போடக் கூடாது.” என்று அவர்களிடம் கூறியதாக விளக்கமளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பான நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு தரப்பினரிடையும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாஜக பிரமுகர்

“இதுகுறித்து தற்போதுவரை காவல்துறைக்கு யாரும் புகாரளிக்கவில்லை. எனவே மேற்கொண்டு வியாபாரிகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.”  என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்கும் பாதுகாப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக அவருக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. அவனது ஆள்கள் சல்மான் கானை ... மேலும் பார்க்க

Zimbabwe: சிங்கங்கள், யானைகள் வாழும் காட்டில் 5 நாள்கள் உயிர்பிழைத்திருந்த 8 வயது சிறுவன்!

வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான காட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் 5 நாள்கள் வரை அங்கே உயிர் பிழைத்திருந்துள்ளார். மட்டுசடோனா தேசிய பூங்கா சிங்கங்கள், யானைகள் உள்ளிட்ட ஆ... மேலும் பார்க்க

GOAT: "ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தேன்..." - தி கோட் படத்தில் நடித்தது குறித்து மீனாட்சி சௌத்ரி

தி கோட், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. கோட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அளித்த பேட்டியில், 'தி கோட்' படம் தனக்குத் தமிழ் ரசிகர்களிடம் நல்... மேலும் பார்க்க

டிரான்ஸ்பார்மரையே திருடிய கும்பல்! - இருளில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்! - அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேசத்தின் படவுன் மாவட்டதில் இருக்கிறது சோராஹா கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறது. இந்தக் கிராமத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறத... மேலும் பார்க்க

Japan: ரூ.11 கோடிக்கு விலை போன 'ப்ளூஃபின் டூனா' மீன்; அப்படி என்ன சிறப்பு?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு உணவகம் ஒரு பைக்கின் அளவிலும் எடையிலும் உள்ள ப்ளூஃபின் டூனா (Bluefin Tuna) மீனை 207 மில்லியன் யென் கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது. டோக்கியோவின் Toyosu மீன் மார்கெ... மேலும் பார்க்க

Zomato: `காதலியை தேடிய பயனர்கள்!' - ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ கடந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடிய தேடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது.கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பயனர்கள் அதிகம் தேட... மேலும் பார்க்க